Search This Blog
Thursday, February 06, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF
தமிழ் புத்தாண்டு விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணப்ப படிவம், விண்ணப்பத்திற்கான வரையறைகள் தமிழ் வளர்ச்சி துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணைய தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தன் விவர குறிப்புகளுடன் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வரும் 29ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். தமிழ்த்தாய் விருது (சிறந்த தமிழ் அமைப்புக்கானது), கபிலர் விருது (மரபு செய்யுள்/கவிதை படைப்புகளை புனைந்து வழங்குபவருக்கு), உ.வே.சா.விருது (கல்வெட்டுகள், அகழாய்வு, ஓலைச்சுவடிகள் பதிப்பு ஆகியவற்றை மேற்கொள்பவருக்கு), கம்பர் விருது (கம்பரை பற்றி திறனாய்வு செய்வோருக்கு), சொல்லின் செல்வர் விருது (சிறந்த இலக்கிய பேச்சாளருக்கு), உமறுப்புலவர் விருது (தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றிவருபவருக்கு), ஜி.யு.போப் விருது (தமிழ் இலக்கியங்களை, அயலக மொழிகளில் மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளருக்கு), இளங்கோவடிகள் விருது (இளங்கோவடிகளின் நடையையொட்டி, புதிய காப்பியம் படைப்பவருக்கோ / சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புபவருக்கு), முதலமைச்சர் கணினி தமிழ் விருது (சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவருக்கு), அம்மா இலக்கிய விருது (மகளிர் இலக்கியங்களை படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி தொண்டாற்றிவரும் பெண் படைப்பாளருக்கு), சிங்காரவேலர் விருது (தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களில், சமுதாய முன்னேற்றத்திற்காகவும் சமத்துவ கொள்கைக்காகவும் தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவருக்கு),
CLICK HERE TO DOWNLOAD PDF
மறைமலையடிகளார் விருது (தனி தமிழில் படைப்புகளை உருவாக்கும் படைப்பாளருக்கு) அயோத்திதாச பண்டிதர் விருது (சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் ஆகியவற்றில் தனக்கென தனி முத்திரை பதித்து வருபவருக்கு), வள்ளலார் விருது (சமரச நெறிகளால் ஆன்மிக தொண்டாற்றுபவருக்கு) காரைக்கால் அம்மையார் விருது (காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ் தொண்டாற்றி வரும் மகளிர் ஒருவருக்கு), சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது (10 பேருக்கு - பிற மொழி படைப்புகளை சிறந்த முறையில் தமிழாக்கம் செய்பவருக்கு) தமிழ்ச்செம்மல் விருது (தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களுக்கு அவர்களின் தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் வழங்கப்படும்), மதுரை, உலக தமிழ்ச்சங்க விருதுகள்-3 (இலக்கிய விருது, இலக்கண விருது, மொழியியல் விருது) வழங்கப்படுகிறது விக்கப்பட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
தமிழ் புத்தாண்டு விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.