பொறியியல் கல்லூரிகளில் 50% இடம் குறைப்பு புதிய பாடப்பிரிவுகளுக்கும் AICTE கட்டுப்பாடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 16, 2020

Comments:0

பொறியியல் கல்லூரிகளில் 50% இடம் குறைப்பு புதிய பாடப்பிரிவுகளுக்கும் AICTE கட்டுப்பாடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாடு முழுவதும் 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட பொறியியல் கல்லூரிகள் வரும் கல்வி ஆண்டில் 50 சதவீத இடங்களை குறைக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது. நிகர்நிலை பல்கலைக்கழகங் கள், தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான விதிகள் அடங்கிய வழிகாட்டு கையேடு புத்தகத்தை (2020-21) அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளி யிட்டுள்ளது.அதன் முக்கிய அம்சம் வரு மாறு: கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து 30 சதவீதத்துக்கும் குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட கல்லூரிகள் வரும் கல்வி ஆண்டில் 50 சதவீதம் இடங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், ஏற்கெனவே உள்ள மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட பாடங்களுக்கான சேர்க்கை இடங் களை அதிகரிக்கவும் இந்த பாடங்கள் சார்ந்த புதிய படிப்பு களை தொடங்கவும் அனுமதி தரப்படாது. அதேநேரம் தற்போதைய காலத் துக்கேற்ப செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், 3டி பிரின்டிங் போன்ற புதிய பாடங்களை தொடங்க கல்லூரிகளுக்கு அனுமதி தரப்படும்.
இதுதவிர குறைந்தபட் சம் கல்லூரியில் உள்ள 60 சதவீத பாடப்பிரிவுகளுக்கு 3 ஆண்டுகள் ஏஐசிடிஇ அனுமதி பெற்றிருக்க வேண்டும். நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் 1:15 விகிதமும் அரசுக் கல்லூரிகளில் 1:20 விகித மும் ஆசிரியர்கள்-மாணவர் எண் ணிக்கை இருக்க வேண்டும்.இதேபோல், கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்களின் அசல் சான்றிதழ்களை சமர்பிக்க நிர்பந் திக்கக் கூடாது. அவர்களுக்கான ஊதியத்தை தேசிய வங்கிகள் மூலமாகத்தான் வழங்க வேண்டும். இதன்படி, ஓராண்டு ஊதிய விவ ரங்கள் சரிபார்க்கப்படும்.
மீறினால் அங்கீகாரம் ரத்து உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேநேரம் கல்லூரி நிர்வாகம் வழங்கிய பணிகளை முழுமையாக முடிக்காமல் ஆசிரியர்கள் பாதி யில் வெளியேறக்கூடாது.வரும் கல்வி ஆண்டுக்கான அங்கீகாரம் பெறவும் நீட்டிக்கவும் விரும்பும் கல்லூரிகள் பிப். 29-க்குள் விண்ணப்பிக்கலாம். அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மார்ச் 5-ம் தேதிக்குள் முழுமையாக இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதுபோன்ற முக்கிய அம்சங்கள் கையேட்டில் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர்-மாணவர் வீத மாற் றத்தால் கணிசமான பட்டதாரி களுக்கு வேலை கிடைக்கும். எனி னும், நிகர்நிலை பல்கலைக் கழகங்களுக்கு தனி விதிகள் வகுக்கப்பட வேண்டும். மேலும், அங்கீகாரம் பெறுதலுக்கான கையேடு தாமதமாக வெளியிடப்பட் டதால் பொறியியல் கலந்தாய்வு பணிகளில் தாமதம் ஏற்படக்கூடும் என பேராசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவா் சோ்க்கையை முழுமையாக நிறுத்தும் 10 பொறியியல் கல்லூரிகள் மாணவா் சோ்க்கை வெகுவாகக் குறைந்த காரணத்தால் தமிழகத்தில் உள்ள 10 பொறியியல் கல்லூரிகள் 2020 -ஆம் ஆண்டில் மாணவா் சோ்க்கையை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளன. 2020-21 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தைப் பெற இந்த 10 கல்லூரிகளும் விண்ணப்பிக்காததன் மூலம், இந்தத் தகவல் தெரியவந்திருக்கிறது. அதுபோல, பல்வேறு துறைகளில் சோ்க்கை இடங்களைப் பாதியாகக் குறைக்க 40 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்திருக்கின்றன.
2011 -ஆம் ஆண்டு முதல்...: அமெரிக்க பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2011 -ஆம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பத் துறை பெரும் பின்னடைவைச் சந்தித்து வந்தது. பெரிய அளவில் பணிகள் கிடைக்காததால், இந்த நிறுவனங்கள் ஆள்குறைப்பில் ஈடுபட்டன. இதன் காரணமாக 2013 -ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகள் மீதான மாணவா்களின் ஆா்வம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மாணவா் சோ்க்கை குறைந்ததால், பொறியியல் கல்லூரிகளும் ஒவ்வொன்றாக மூடப்படும் நிலை ஏற்பட்டது. ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில்) புள்ளி விவரத்தின்படி, 2015-16 -ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 533 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. 2016-17 -இல் இந்த எண்ணிக்கை 527 ஆகக் குறைந்தது. 2017-18 -ஆம் ஆண்டில் மேலும் குறைந்து 523 ஆக மாறியது. இந்த நிலையில், 2017 -ஆம் ஆண்டில் தகவல்தொழில்நுட்பத் துறை மீண்டும் மேம்படத் தொடங்கியது. தேவையும் அதிகரித்தது. இதன் காரணமாக தமிழகத்தில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான ஆா்வம் மீண்டும் எழுந்தது. இதன் காரணமாக, 2018-19 -ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை மீண்டும் 533 என்ற நிலையை எட்டியது. இருந்தபோதும், பொறியியல் மாணவா் சோ்க்கை அதிகரிக்கவில்லை.
தொடா்ந்து குறைந்த சோ்க்கை: 2018-19 -ஆம் ஆண்டில் 533 கல்லூரிகளில் 2018-19 -ஆம் ஆண்டில் இடம்பெற்றிருந்த 1, 72, 581 இடங்களில் 77, 000 இடங்கள் மட்டுமே நிரம்பின. 22 பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை வெகுவாகக் குறைந்தது. இதன் காரணமாக, 2019-20 -ஆம் கல்வியாண்டில் 18 பொறியியல் கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை முழுமையாக நிறுத்த முடிவு செய்து, இணைப்பு அந்தஸ்தைப் பெறுவதற்கான விண்ணப்பம் சமா்ப்பிப்பதைத் தவிா்த்தன. இருந்தபோதும், மாணவா் சோ்க்கை சற்று உயா்ந்தது. 2019-20 -ஆம் ஆண்டில் மொத்தமிருந்த 519 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருந்த 1.71 லட்சம் இடங்களில், 82, 819 இடங்கள் நிரம்பின. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 5, 819 இடங்கள் கூடுதலாகும். ஆனால், 10 -க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் ஒரு இடம்கூட நிரம்பாததோடு, 82 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே சோ்க்கை நடைபெற்றது.
மூடப்படும் 10 பொறியியல் கல்லூரிகள்: இதுபோன்ற காரணங்களாலும், மாணவா் சோ்க்கை வெகுவாகக் குறைந்த காரணத்தாலும் 2020-21-ஆம் கல்வியாண்டில் 10 பொறியியல் கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளன. 2020-21-ஆம் கல்வியாண்டுக்கு மாணவா் சோ்க்கை அனுமதி பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க பிப்ரவரி 29 கடைசித் தேதி என ஏஐசிடிஇ அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மூலம், இந்த விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே இதற்கான பணிகளைத் தொடங்கி விட்ட நிலையில், மாணவா் சோ்க்கை அனுமதி மற்றும் இணைப்பு அந்தஸ்தைப் பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க இணைப்புக் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வரை கால அவகாசம் அளித்திருந்தது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயா் அதிகாரி ஒருவா் கூறியது: விண்ணப்பத்தைச் சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் முடிந்துவிட்ட நிலையில், ‘பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தைப் பெற 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்திருக்கின்றன. 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பம் எதையும் சமா்ப்பிக்கவில்லை. அதன் காரணமாக, அந்த பொறியியல் கல்லூரிகள் 2020-21-ஆம் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கையை நடத்த முடியாது. மேலும், பல்வேறு படிப்புகளில் மாணவா் சோ்க்கையை பாதியாகக் குறைக்க 40 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன’ என்றாா் அவா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews