TNPSC - குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி பிப். 2-ல் தொடங்குகிறது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 31, 2020

Comments:0

TNPSC - குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி பிப். 2-ல் தொடங்குகிறது!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
*.அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் குரூப் 1, குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி சென்னையில் பிப்ரவரி 2-ல் தொடங்குகிறது. *.இதுகுறித்து அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ந.வாசுதேவன் வெளியிட்டஅறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் குருப் 1, குருப் 2 தேர்வுகளுக்கு எங்கள் மையம் சார்பாக இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
*.இந்த பயிற்சியை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்மற்றும் தீண்டாமை ஒழிப்புமுன்னனி ஆகியவற்றுடன் இணைந்து நடத்துகிறோம். தொழில்நுட்பரீதியாகவும், மாணவர் திறனை வெளிக்கொணரும் விதமாகவும் கலந்துரையாடல் வடிவத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். துறை சார்ந்த வல்லுநர்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துவார்கள். *.இங்கு படித்த 850-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிகின்றனர். இந்த பயிற்சியில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட அனைத்துப்பிரிவு மாணவர்களும் பங்கேற்கலாம்.
*.சென்னை பாரிமுனையில்உள்ள சிஐடியு அலுவலகத்தில்வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும். அதன்படிபயிற்சி வகுப்புகள் பிப்.2-ம் தேதி தொடங்குகிறது. *.இதில் பங்கேற்க விரும்புபவர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை பாலாஜி - 90432 29495, செளந்தர்- 90950 06640, வாசுதேவன்-94446 41712ஆகிய எண்களில் தொடர்புகொண்டு அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews