Search This Blog
Thursday, January 23, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுகள் துவங்கியுள்ளன. கல்வியாண்டு என்பது, ஆண்டுதோறும் ஜூனில் துவங்கி, ஏப்ரலில் முடியும். மே மாதம் கோடை விடுமுறை. அதனால், தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாணவர் சேர்க்கை நடக்கும். ஆனால், சென்னையில் உள்ள பள்ளிகளில், ஜனவரியிலேயே மாணவர் சேர்க்கை துவங்குவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும், தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கி உள்ளன.மயிலாப்பூர், பி.எஸ்., சீனியர் பள்ளி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளிகளில், பிப்., 7, 8ல், ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளிகளில், கடந்த திங்களன்றே, ஆன்லைன்' பதிவு துவங்கி விட்டது. பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளிகளில், சர்ச் பார்க் வளாகத்தில், வரும், 27 முதல், 29ம் தேதி வரையும், எழும்பூர் வளாக பள்ளியில், நேற்று முதலும் ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் பள்ளியில், ஜன., 6ல் ஆன்லைன் பதிவுகள் துவங்கி விட்டன. வரும், 24ல், முடிவடைய உள்ளன. நங்கநல்லுார் மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளி, ஜன., 24; கோபாலபுரம் டி.ஏ.வி., குழும பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, பிப்., 29 முதல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளலாம். வேலம்மாள் குழும பள்ளிகளில், டிசம்பரில் துவங்கி விட்டது.
செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிகளில், பிப்., முதலும், பால வித்யா மந்திர் பள்ளியில், பிப்., 5லிருந்தும், நேரடியாக விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. இதேபோன்று பல்வேறு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடவடிக்கை துவங்கியுள்ளது.ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு செய்வதற்கான தேதியை உறுதி செய்ய, பள்ளிகளின் இணையதளங்கள் அல்லது பள்ளி அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
தனியார் பள்ளிகளில் LKG 'அட்மிஷன்' துவக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.