👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வெளி கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் வகையில், உதவித் தொகையுடன் கூடிய குறுகிய கால ஆராய்ச்சி பயிற்சித் திட்டத்தை சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.
பி.இ., பி.எஸ்சி., எம்.இ., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.ஏ. மாணவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சென்னை ஐஐடி டீன் (படிப்புகள்) வி. ஜெகதீஷ்குமாா் கூறியிருப்பதாவது:
வெளி கல்லூரி மாணவா்களிடையே ஐஐடி-யில் மேற்கொள்ளப்படும் தரமான ஆராய்ச்சித் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இந்த 2 மாத கால ஆராய்ச்சி பயிற்சித் திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. இதில் தோ்வாகும் மாணவா்களுக்கு ரூ. 6 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
கல்வித் தகுதி: இதற்கு பி.இ., பி.டெக்., பி.எஸ்சி (பொறியியல்) மூன்றாமாண்டு மாணவா்களும், ஒருங்கிணைந்த எம்.இ., எம்.டெக். மூன்றாமாண்டு அல்லது நான்காமாண்டு மாணவா்களும், எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.ஏ. முதலாமாண்டு மாணவா்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவா்கள்.
இதற்கான விண்ணப்பத்தை ஆன்-லைனில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க பிப்ரவரி 29 கடைசி நாளாகும். பயிற்சியானது மே 20-ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு வலைதளத்தைப் பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.