பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.01.20 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 24, 2020

Comments:0

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.01.20

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருக்குறள்
அதிகாரம்:அவாவறுத்தல்
திருக்குறள்:363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல்.
விளக்கம்: எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.
பழமொழி
Do not cry for the moon.
எட்டாத கனிக்கு ஆசைப்படாதே.
இரண்டொழுக்க பண்புகள்
1. நான் விதைப்பதை தான் அறுப்பேன் .
2. எனவே என் உள்ளத்தில் அன்பு, இரக்கம், கீழ்படிதல் போன்ற நல்ல விதைகளை விதைப்பேன்.
பொன்மொழி
வாழ்வியல் மதிப்பு என்பது சொல்லுக்கும் செயலுக்கும் கிடைக்கும் பரிசு ஆகும். ------பரமஹம்சர்
பொது அறிவு
1.ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்? கர்ணம் மல்லேஸ்வரி.
2.மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு எது? கல்லீரல்.
English words & meanings
yew - a tree with evergreen leaves found in coniferous forests. பசுமை மாறா ஊசியிலை மரவகை.
York stone - it is Carboniferous sedimentary rock used in array of building. கட்டிடத்திற்குப் பயன்படும் கல் வகை.
ஆரோக்ய வாழ்வு
வெந்தயம் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி ஏற்படுத்தும் குணம் கொண்டது. வெந்தயத்தை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டால் தேவையற்ற ஊளைசதை என சொல்லப்படும் கொழுப்புகள் முற்றிலுமாக குறையும்.
Some important abbreviations for students
M.O.T - Ministry of Transport.
DOS - Disk Operating System
நீதிக்கதை
தமிழ் கதைகள் - திருக்குறள் நீதிக்கதைகள்
கல்வியே அழியாத செல்வம்
குறள் : கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை.
விளக்கம் : கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை.
கதை : கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர்.
இரத்தினசாமி தனது வறுமையின் காரணமாக மகன்கள் இருவரையும் அழைத்து, நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா? என்று கேட்டார்.
கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், அப்பா, நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றான். இளையவன் முத்து, எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன் என்றான்.
இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான்.
ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், தம்பி கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது.
ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல, பணம் எனும் செல்வம் நிலையற்றது என்று கல்வியின் பெரும்மையை உணர்த்தினார்.
நீதி :
கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம்.
இன்றைய செய்திகள் 25.01.20
◆தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் விரைந்து நடைபெற்று வருவதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
◆திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக சென்னை மாநகராட்சி உருவாக்கிய துணை விதிகளை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இனி, குப்பைகளைஅகற்ற மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
◆குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
◆சீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் நோயின் தாக்கம் குறித்து உலகம் முழுவதும் பீதி ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
◆மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸில் நடப்பு சாம்பியனும் ஜப்பான் வீராங்கனையுமான நவோமி ஒசாகா 15 வயது அமெரிக்க வீராங்கனை கோகோ காஃபிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
Today's Headlines
🌸The TNPSC has announced that person who are writing the exam should not lose hope as the reforms in the selection process are underway.
🌸The Tamil Nadu Government has given permission for the implementation of the by-laws laid down by the Madras Corporation regarding the management of the disaster. No longer have to pay the garbage disposal corporation.
🌸The Election Commission has informed the Supreme Court that political parties who has criminal background should not be given the opportunity in the election.
🌸Official sources says that Indian students studying in China are safe and healthy as the world is panicking over the impact of coronavirus spreading from China.
🌸Japanese champion Naomi Osaka shock shockingly lose her match against 15-year-old American player Coko Goph at the Australian Open in Melbourne.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews