Search This Blog
Sunday, January 12, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத் தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் தேர் வுகளின் விடைத்தாள்கள் தேர்வுக்கு முன்பே சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . தமிழகத்தில் கடந்த மாதம் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் நடந்தது . இதில் , 9ம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான வினாத்தாள் தேர்வுக்கு 2 நாட்கள் முன்பே இணை யதளத்தில் வெளியானது .
இதைத் தொடர்ந்து பிளஸ் - 1 , பிளஸ் - 2 வேதியி யல் பாட வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின இது தமி ழக அளவில் பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியது . வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளி யானததைத்தொடர்ந்து மாற்று வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது . இந்த விவகாரம் முடிவதற் குள் தற்போது பிளஸ் - 2 முதல் திருப்புதல் தேர்வுக்கான கணித வினாத்தாள்கள் மற்றும் பத்தாம் வகுப்பு கணிதம் மற்றும் அறிவியல் தேர்வு வினாத்தாள்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதனால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர் . இவ்வாறு வெளியாகும் வினாத்தாள்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தது என தெரியாமல் மாவட்ட அளவிலான கல்வித்துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர் .
கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரண மாகத்தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் . இந்த செயல் மாணவர்களின் கல்வி அறிவை பாதிக்கும் எனவும் , அவர்களுக்கு தேர்வின் மேல் உள்ள நாட்டம் குறையும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர் . இது குறித்து கலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ராஜ் குமார் கூறியதாவது தேர்வுக்கு முன்பு வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது .
இது மாணவர்கள் மத்தியில் அதிக எதிர் பார்ப்பை ஏற்படுத்துகிறது . குறிப்பாக , முழு ஆண்டு தேர்வுக்கான வினாத்தாள் கள் இது போன்று வெளியா குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட குறைந்த மதிப்பெண் எடுக்கும் வாய்ப்பு உள்ளது . தேர்வுகள் வைப்பது மாண வர்கள் பாட புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்பதற்குத் தான் . ஆனால் , வினாத் தாள் வெளியாவதால் குறிப்பிட்ட விடைகளை மட்டுமே மாணவர்கள் படிக்கும் நிலை ஏற்படுகிறது மேலும் , தேர்வு அறை யில் வினாத்தாள் மாற் றம் செய்து கொடுத்தால் , மாணவர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது . வினாத்தாள் வெளியா கும்போது மாற்று வினாத் தாளை உடனடியாகதயார் செய்ய ஆசிரியர்களும் மிகவும் சிரமப்பட வேண் டியுள்ளது . எனவே , சமூக வலைத்தளங்களில் வினாத் தாள்கள் வெளியாவதை தடுக்க கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் . வினாத்தாள்களை வெளிவிடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் . வினாத்தாள்கள் வைக்கப்படும் இடங்களில் கண்கா ணிப்பு கேமரா பொருத்த வேண்டும் . பொதுத்தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் , இதனை ஒரு முக்கிய பிரச்னையாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் . இவ்வாறு அவர் கூறி னார் .
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூறுகையில் , “ வினாத்தாள் இணையதளத்தில் வெளியாகி அது கையில் கிடைத்தால் ஜாலி தான் . அவ்வாறு கிடைத்து திடீரென வேறு வினாத் தாள் கொடுத்தாலும் தேர்வு எழுதித்தான் ஆக வேண்டும் . ஆனால் வெளியான வினாத்தாள் தேர்வில் வந்தால் நல்லது என நினைக்கிறோம் " என்றனர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி; மாணவர்கள் மகிழ்ச்சி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.