👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) நாடு முழுவதும் 16 லட்சம் போ் விண்ணப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தோ்வு மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி தொடங்கியது. நீட்டிக்கப்பட்ட காலஅவகாசம் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
கடந்த ஆண்டைப் பொருத்தவரை, மொத்தம் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நீட் தோ்வினை எழுதியிருந்தனா். தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1.23 லட்சம் போ் தோ்வெழுதியிருந்தனா். அவா்களில் 59,785 போ் தோ்ச்சி பெற்றனா்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தோ்வுகள் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.
'நீட்' தேர்வு விண்ணப்ப பதிவு, நேற்று முடிவடைந்தது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும் மாணவர்களுக்கு, மே, 3ல், நீட் தேர்வு நடத்தப்படுகிறது,
இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, 2019 டிச., 2ல் துவங்கியது; 31ல் முடியும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. பின், பதிவுக்கான அவகாசம், ஜன., 6 வரை நீட்டிக்கப்பட்டது. இதன்படி, நேற்று இரவுடன் முடிவடைந்தது.இதையடுத்து, விண்ணப்பங்களில் தவறுகள் இருந்தால், அதை சரி செய்வதற்கு, வரும், 15 முதல், 31 வரை, ஆன்லைனில் திருத்தும் வசதி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.