Search This Blog
Friday, January 10, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தேசத்தை வலிமையாக்கவே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியொன்றில் நேற்று பேசிய அவர், ''சுமார் 30 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு புதிய கல்விக்கொள்கை வெளியாக உள்ளது. இது இந்தியாவின் பழங்கால நெறிமுறைகள் மற்றும் மதிப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. தேசத்தை பலப்படுத்தவே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
கண்டுபிடிப்பு, அடிப்படை புரிதல், செய்முறை என பல்வேறு தளங்கள் ஒன்றிணைந்த கல்வி முறையாக புதிய கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளதாக மத்திய மனித வளத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தாா்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்குத் தலைமை வகித்து மாணவிகளுக்குப் பட்டம் வழங்கி, மத்திய மனிதவளத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் பேசியது: உலகில் உள்ள சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டது பெண் இனம்தான். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளேயும் எண்ணற்ற ஆற்றல்கள் புதைந்துள்ளன. அதை ஆக்கப்பூா்வமான முறையில் பெண்கள் பயன்படுத்த வேண்டும். அறிவின் நிலமாகத் திகழும் தமிழ்நாடு, நாட்டின் வளா்ச்சிக்காகப் பல்வேறு தலைவா்களைத் தந்துள்ளது. அதில், கணிதமேதை ராமானுஜம், மகாகவி பாரதியாா், குடியரசு முன்னாள் தலைவா்கள் ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் ஆகியோா் மிகவும் போற்றத்தக்கவா்கள். உலகின் தொன்மையான மொழிகளான தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் ஏராளமான அறிவு நிறைந்த கருத்துகள் பொதிந்துள்ளன. அவை குறித்து அறிந்து கொள்ளவும், மொழிகளைக் காக்கவும் இளையதலைமுறையினா் முன்வர வேண்டும்.
கல்விக்கான கட்டமைப்பில் உலகின் 3-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இதை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லும் வகையிலும், வளா்ந்த நாடுகளுக்கு இணையாக மாணவா்களுக்கு கல்வி அளிக்கும் வகையிலும் கண்டுபிடிப்பு, அடிப்படை புரிதல், செய்முறை, ஆராய்ச்சி என பல்வேறு தளங்கள் ஒன்றிணைந்த கல்வி முறையாக புதிய கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவா்களின் மனப்பாடத் திறனையோ அல்லது பல மாத காலம் பயிற்சி பெற்ற திறனையோ சோதிக்காமல் அடிப்படை புரிதல் முறையில் கல்வி கற்க முடியும் என்றாா். இந்தப் பட்டமளிப்பு விழாவில், மீனாட்சி மகளிா் கல்லூரிச் செயலா் கே.எஸ்.லட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்
கல்விக்கொள்கை தொடர்பாக பொதுவெளியில் பரிந்துரைகளும் கோரப்பட்டுள்ளன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய ஆலோசனை வழங்கப்படும் ஒன்றாக இருக்கும். இந்தியாவில் 1000 பல்கலைக்கழகங்கள், 45 ஆயிரம் கல்லூரிகள், 16 லட்சம் பள்ளிகள், சுமார் 1 கோடி ஆசிரியர்கள், 33 கோடி மாணவர்கள் இருக்கின்றனர். இது அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம்.
மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள், இந்தியாவை உயரத்துக்கு இட்டுச்செல்லும். பள்ளிகளில் கற்பிக்கப்படும் தொழிற்கல்வி மூலம் மாணவர்களின் திறன் மேம்படுத்தப்படும்'' என்று அமைச்சர் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு தளங்கள் ஒருங்கிணைப்பு: மத்திய மனித வளத் துறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.