ரூ.56 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 06, 2020

Comments:0

ரூ.56 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாடு தொழில் வணிக ஆணையரகத்தில் காலியாக உள்ள உதவி இயக்குநர், உதவி கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. இதற்கு பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.
மொத்த காலியிடங்கள்: 12
பணி: Assistant Director of industries and Commerce (Technical) காலியிடங்கள்: 11
தகுதி: பொறியியல் துறையில் சிவில் மற்றும் ஆர்கிடெக்சர் பிரிவைத் தவிர மற்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன், சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Superintendent (Chemical Wing) காலியிடங்கள்: 01 தகுதி: பொறியியல் துறையில் வேதியியல் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பதுடன், குறைந்தது மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 56,100 -1,77,500
வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி 58 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினராக இருந்தால் 35 வயதிற்குள்ளும், ராணுவத்தினராக இருந்தால் 48 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: புதிதாக விண்ணப்பிப்போர் மட்டும் தேர்வுக்கட்டணமாக ரூ.200, ஒரு முறை பதிவுக்கட்டணமாக ரூ.150 என ரூ.350 செலுத்த வேண்டும். மற்றவர்கள் தேர்வு கட்டணமாக ரூ.200 மட்டும் செலுத்தினால் போதும். கட்டணத்தை ஆன்லைன், வங்கிகள் மூலமாக செலுத்தலாம்.
தேர்வுகள் நடைபெறும் தேதிகள்: 2020 ஏப்ரல் 25, 26
தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 10.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2020
மேலும் முழுமையான விபரங்கள் அறிய விரும்புவோர் http://www.tnpsc.gov.in அல்லது
http://www.tnpsc.gov.in/Notifications/2019_34_notyfn_AD_IndComm.pdf
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews