Search This Blog
Sunday, January 05, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சிலர் உளவு பார்ப்பதற்காகவோ, வக்கிர எண்ணங்களுடனோ ரகசிய கேமராக்களை ஜவுளிக் கடைகளின் உடை மாற்றும் அறை, ஹோட்டல்களின் படுக்கை அறை, குளியல் அறைகளில் பொருத்துகின்றனர்.
கதவு கைப்பிடி, கடிகாரம், சுவிட்ச், சுவிட்ச் போர்டு, பல வகை லைட் வடிவம், அலங்கார விளக்கு, பொம்மை, குளியல் அறை லைட், ஷவர், வாட்டர் ஹீட்டர், பூந்தொட்டி, திரைச் சீலை, வரவேற்பறை மாடல்கள், போர்டுகள் என எந்த வடிவங்களிலும் இருக்கும்,
இவற்றை கண்டறியும் வழிகள் இதோ:
* ஹோட்டல் அறை, உடை மாற்றும் அறைகளில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது ஆள் காட்டி விரலை வைத்தால் விரல் நுனிக்கும், கண்ணாடி பிம்பத்தில் தெரியும் பிம்ப ஆள்காட்டி விரல் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும்.
அப்படி இல்லையேல், அது கண்ணாடிக்கு பின்னால் இருந்தும் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட 'இரு பக்க' கண்ணாடியாகும்.
* ஹோட்டல்களில் தங்கும் அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைக்க வேண்டும். பின்னர், அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுத்தால் எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் அங்கு ரகசிய கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.
* செல்போனில் யாரிடமாவது பேசியபடி அறை முழுவதும் மெதுவாக நடக்க வேண்டும். திடீரென இரைச்சல் சத்தம் கேட்டால், அருகே ரகசிய கேமரா இருப்பது உறுதி.
* விளக்குகளை அணைத்து விட்டு கண்ணாடி மீது டார்ச் அடித்துப் பார்த்தால், பின்னால் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறியலாம்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
ரகசிய கேமராக்களை கண்டறிவது எப்படி?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.