Search This Blog
Monday, December 16, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஒரே ஆண்டில், 682 கோடி ரூபாய் செலவில், ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொண்டு, சென்னை, ஐ.ஐ.டி., சாதனை படைத்துள்ளது.
தேசிய உயர் கல்வி நிறுவனமான சென்னை, ஐ.ஐ.டி., நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை, ஐ.ஐ.டி., பல்வேறு பெருமைகளை பெற்றுள்ளது. ஆராய்ச்சிகளில் சிறந்த கல்வி நிறுவனமாக, புதிய கண்டுபிடிப்புகளுக்கான அடல் தர வரிசை பட்டியல் அமைப்பால், தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட, தேசிய தர வரிசை பட்டியலில், முதலிடம் பெற்றுள்ளது.
மேலும், மத்திய அரசின், மேம்பட்ட சீர்மிகு கல்வி நிறுவனம் என்ற, 'இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ்' என்ற, கவுரவத்தையும் பெற்றுள்ளது. இந்த ஆண்டில், சென்னை, ஐ.ஐ.டி., பல பெருமைகளை பெற்றுள்ளது; ஆராய்ச்சி திட்டங்களிலும் முன்னிலையில் உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், 146 கோடி ரூபாய் மதிப்பிலான, 940 ஆராய்ச்சி திட்டங்கள், சென்னை, ஐ.ஐ.டி., மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதேபோல், 536 கோடி ரூபாய் மதிப்பிலான, 607 ஆராய்ச்சி திட்டங்கள், மத்திய அரசின் நேரடி நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
ஆராய்ச்சி திட்டங்கள் ஐ.ஐ.டி., சாதனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.