Search This Blog
Saturday, December 14, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
TN TRB Educational Officer Recruitment 2019: Tamil Nadu Teachers Recruitment Board: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு பி.இ.,பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
தமிழகத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த நவம்பர் 27 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி, மொத்தம் வட்டார கல்வி அலுவலர் பதவிக்கு 97 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த பதவிக்கான சம்பளம் மாதம் ரூ.36,900 – ரூ.1,16,600 ஆகும். இந்த TN TRB Educational Officer Recruitment 2019 பற்றிய செய்திக்கு இங்கு க்ளிக் செய்யவும்.
இதனிடையே பி.இ இன்ஜினியரிங் படிப்பு முடித்துவிட்டு பி.எட் படித்தவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதாவது, இன்ஜினியிரங் படிப்புக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அவ்வாறு டெட் தேர்ச்சி பெறுபவர்கள், 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு கணிதம் பாட ஆசிரியர் ஆகலாம். இதனால், இன்ஜினியரிங் மாணவர்கள், விண்ணப்பதாரர்கள் உற்சாகம் அடைந்தனர். ஏற்கனவே, பி.எட் படிப்பில் இன்ஜினியரிங் மாணவர்களுக்காக 5 சதவீத இடஒதுக்கீடும் உள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் டிசம்பர் 12 ஆம் தேதி புதிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வுக்கு எந்த படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், இணை கல்வித்தகுதி உள்ள பல்கலைக்கழகங்கள் என அனைத்து விபரங்களும் ஒரு அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. இணை கல்வித்தகுதி விபரங்களை பார்ப்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
B.Ed/M.Ed
BEO/DEE
ENGINEERING
TET/TRB
B.E., B.Ed முடித்தவர்கள் வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க முடியுமா?
B.E., B.Ed முடித்தவர்கள் வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க முடியுமா?
Tags
# B.Ed/M.Ed
# BEO/DEE
# ENGINEERING
# TET/TRB
TET/TRB
Labels:
B.Ed/M.Ed,
BEO/DEE,
ENGINEERING,
TET/TRB
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.