புதிய ஊதிய குறை தீர்க்கும் குழுவின் ஆய்வு வரம்புகள் வெளியீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 19, 2019

Comments:0

புதிய ஊதிய குறை தீர்க்கும் குழுவின் ஆய்வு வரம்புகள் வெளியீடு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அ ) ஒரு நபர் குழு , 2010 - இன் பரிந்துரைகளின் அடிப்படையிலும் , அரசாணை ( நிலை ) எண் . 71 , நிதி ( ஊதிய பிரிவு ) துறை , நாள் 26 . 02 . 2011 மற்றும் அரசாணை ( நிலை ) எண் . 242 , நிதி ( அதிய பாவு ) துறை , நாள் 22 . 07 . 2013 ஆகியவற்றில் ஆணையிடப்பட்ட ஊதியக் கட்டமைப்பில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக பணியாளர் சங்கங்கள் / தனிநபர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஊதிய குறை தீர்க்கும் குழு ஆராய்ந்திடவும் ;
ஆ ) அரசாணை ( நிலை ) எண் . 71 , நிதி ( ஊதிய பிரிவு ) துறை , நாள் 26 . 02 . 2011 , முந்தைய ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் அறிக்கை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணை ( நிலை ) எண் . 242 , நிதி ( ஊதிய பிரிவு ) துறை , நாள் 22 . 07 . 2013 - யை மறு ஆய்வு செய்திடவும் ; இ ) ஊதிய குறை தீர்க்கும் குழுவானது இந்நேர்வில் கருதப்படும் மனுக்கள் / முரண்பாடுகளின் மீது தனது குறிப்பிட்ட பரிந்துரையினை அரசிற்கு வழங்கிடவும் ஈ ) ஊதிய குறை தீர்க்கும் குழுவானது தனது அறிக்கையினை நான்கு மாத காலங்களுக்குள் அரசிற்கு சமர்ப்பிக்கும்.
அரசாணை ( நிலை ) எண் . 71 , நிதி ( ஊதிய பிரிவு ) துறை , நாள் 26 . 02 . 2011 மற்றும் ஊதிய குறை தீர்க்கும் குழு , 2013 - ன் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணை ( நிலை ) எண் . 242 , நிதி ( ஊதிய பிரிவு ) துறை , நாள் 22 . 07 . 2013 ஆகிய ஆணைகளில் ஊதிய திருத்தம் செய்யப்பட்டதால் பாதிப்புக்குள்ளான தனிப்பட்ட பணியாளர்கள் / பணியாளர் சங்கங்கள் தங்களது முறையீட்டு மனுவினை 03 . 01 . 2020 - க்குள் தலைவர் , ஊதிய குறை தீர்க்கும் குழு , தரை தளம் , அரசு தகவல் தொகுப்பு விவர மைய வளாகம் , காந்தி மண்டபம் சாலை , கோட்டூர்புரம் , சென்னை - 600 025 என்ற முகவரிக்கு தங்களது முழு விலாசத்தினை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் . 03 . 01 . 2020 - க்கு பிறகு கிடைக்கப்பெறும் மனுக்கள் பரிசீலிக்கப்படமாட்டாது . நேரடி கேட்பிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews