👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தோட்டத்தில் காய்கறிகளை அறுவடை செய்து தங்களது விவசாய ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மாதனூர் ஒன்றியம் பள்ளிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 133 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பள்ளியின் தலைமையாசிரியர் சேகர் உதவியுடன் அரசு பள்ளி மாணவர்கள் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட ரசாயன பொருட்களை பயன்படுத்தாமல் பள்ளியில் இயற்கைத் தோட்டம் அமைத்துள்ளனர்.
இந்த இயற்கை தோட்டத்தின் மூலமாக காய்கறிகள், பழங்கள், மலர்கள், கீரைகள், மூலிகைகள் ஆகியவற்றை இயற்கை முறையில் பயிர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பள்ளித் தோட்டத்தில் விளைந்த 2 பூசணிக்காய்கள், 120 கிச்சிலி காய்கள் (ஊறுகாய் காய்கள்), ஒரு வாழை குலை, வாழைத்தண்டுகள் உள்ளிட்ட காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டன. பின்னர் இந்த காய்கறிகளை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விற்பனைக்காக சந்தைப்படுத்தினர்.
ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதியினர் மாணவர்களுடைய விவசாயத்தின் மீதான ஆர்வத்தை பாராட்டி அந்த காய்கறிகளை தங்களது வீட்டுக்கு வாங்கிச்சென்றனர். இதன் மூலம் பள்ளிக்கு ₹400 திரட்டப்பட்டு பள்ளிக்கணக்கில் சேர்க்கப்பட்டது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.