ஊதிய முரண்பாட்டை களைய குழு ?? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 12, 2019

Comments:0

ஊதிய முரண்பாட்டை களைய குழு ??

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வரப்போகிறதா...?? *தமிழக அரசு ஊழியர்களுக்கு அரசாணை எண்: 234 நாள் 01.06.2009ன் படி 6 வது ஊதியக்குழு பரிந்துரைகள் 2009 முதல் வழங்கப்பட்டது இதில் உள்ள குறைபாடுகளை களைவதற்காக ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு பல்வேறு துறைகளிலுள்ள சேர்ந்த 52 பிரிவினருக்கு ஒரு நபர் குழு மிகை ஊதியம் அனுமதித்து... *இதை தவறென உணர்ந்த அரசு அரசாணை எண்: 71 நாள்-26.02.2011 மூலம் 2011இல் ஊதியக் குறைப்பு செய்தது. இதை எதிர்த்த அரசு ஊழியர்கள் அடுத்த மூன்று நபர்கள் ஊதிய குறை தீர்க்கும் குழுவிடம் முறையிட்டனர் 2013-இல் மூன்று நபர் ஊதியக்குழுவும் ஊழியர்களுக்கு குறைப்பு செய்தது சரி மிகை ஊதியம் தவறு ஊதியத்தினை குறைக்க வேண்டும் என கூறி அரசாணை எண்:242 நாள்-22.07.2013 வெளியிடப்பட்டது அதனை எதிர்த்து பல்வேறு அரசு ஊழியர்கள் அமைப்புகள், ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு
தொடுத்தனர் அந்த வழக்கிற்கான உத்தரவு 2014 இல் பெறப்பட்டது.சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஊதியக் குறைப்பு தவறு என தீர்ப்பு பெறப்பட்டது... இதனை எதிர்த்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்ற இவ்வழக்கில் முக்கிய பங்குதாரர் Rural Development Engineers Association அவர்கள் கொடுத்த அந்த வழக்கிற்கான தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய அதே தீர்ப்பையே உச்சநீதிமன்றம் உறுதி செய்து ஓய்வுபெற்ற நீதியரசர்.திரு.முருகேசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழக அரசு அரசாணை எண்: 381 நாள் - 04.12.2019 தற்போது வெளியிட்டுள்ளது இந்த அரசாணை முழுக்க முழுக்க ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதியத்தினை குறைப்பது குறித்த பிரிவினருக்கும் தனிநபர் அமைப்புகள் மூலம் பெறப்பட்ட கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்யவும் ஒரு நபர் குழுவில் உயர்த்தப்பட்டு பின்பு,அரசாணை எண் :71 ல் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது பற்றி மட்டுமே இந்த குழு ஆராயும், முந்தைய ஊதியக்குழுவில் உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியத்தை தொடர்வதா..? அல்லது குறைப்பதா...?என்பது குறித்த பரிந்துரைகளையும் மறுபரிசீலனை செய்ய மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.* *தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு இதுவரை மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கப்படவில்லை மாநிலத்தில் சக இடைநிலை ஆசிரியர்களை அனுமதியும் வழங்கப்படவில்லை... இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற எந்த ஒரு கோரிக்கையும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் அல்லது தற்போது தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள 381 அரசாணையில் குறிப்பிடப்படவில்லை நிலை இவ்வாறு இருக்கும்போது தமிழக அரசு தாமாக முன்வந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 9300-4200 வழங்க முன்வருமாறு என்பதை சற்று சிந்தித்து நிதானித்து முடிவு எடுத்துக் கொள்ளுங்கள்...*
*உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கொடுங்கள் என்றாலே தமிழக அரசு அதை தர இயலாது என மறுத்து விடும் சூழலில் தற்போதைய தீர்ப்புக்கும் அரசாணைக்கு எந்த சம்பந்தமும் இல்லாத நாம் வழக்கு முடிந்த பின்பு தீர்ப்பு வெளியான பின்பு அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்பு எங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டால் அது எப்படி இருக்கும் என்பதை படித்த கற்றறிந்தவர்களாகிய நமக்கு தெரியும்...*😜😜😜 *10 ஆண்டுகளாக கடும் போராட்டத்தை பல்வேறு இயக்கங்கள் முன்னெடுத்த போதும் பல நீதிமன்ற தீர்ப்புகள் பெற்றபோதும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தையோ மாநில அரசுக்கு இணையான ஊதியத்தையோ வழங்காத தமிழக அரசு, இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பந்தமில்லாத வழக்கில் இடைச்செருகலாக Implement மட்டும் செய்துவிட்டு வழக்கின் விசாரணையிலும் தீர்ப்பில் கலந்துகொள்ளாமல் இருந்து விட்டு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியான பின்பு எங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென்றால் என்றால் இது எத்தகைய அறியாமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்...எனவே இது முழுக்க முழுக்க வீணான செயலாகும்...😥😥 நீங்களே உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் இந்த அரசாணையும் படித்து தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள்...இந்த வழக்கு முழுக்க முழுக்க உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியத்தை குறைப்பது அல்லது வேண்டாமா ?? என்பது மட்டுமே....*
(இதை பார்க்கும் போது பழைய பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது மொட்டைக்கு முழங்காலுக்கும் என்ன சம்பந்தம்) *கொடுத்த ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்க இந்த 🖐🏻🖐🏻🖐🏻 காட்டுகின்ற இயக்கம் இப்படி ஆசிரியர்களை ஏமாற்றுவதற்கு பதிலாக உருப்படியாக ஏதாவது வலிமையான போராட்டத்தையோ அல்லது நீதிமன்ற தீர்ப்புகளை நேரடியாக இடைநிலை ஆசிரியர்களுக்காக மட்டுமே பெற்றால் தான் ஆசிரியர்கள் வாழ்வு மலரும்....* _(ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்பது தற்போது சரியாக நடந்து கொண்டிருக்கிறது.)_ சாதாரண நிலை-9300-4200 தேர்வு நிலை-9300-4500 சிறப்பு நிலை-15600-5400🤣🤣🤣🤣🤣🤣🤣 *புதிதாக வழக்கு தொடுத்து இன்னும் பல ஆண்டுகளை கடப்பதை விட ஏற்கனவே இருக்கும் வழக்குகளை ஆதாரங்களுடன் (மத்திய அரசுக்கு இணையாக அல்லது மாநில அரசுக்கு இணையாகவோ) இடைநிலை ஆசிரியர்களுக்கு சாதகமாக தீர்ப்பினை பெற சட்டப்பூர்வமான வழிமுறைகளை ஆராய்ந்தால் நன்றாக இருக்கும்.*👍🏻👍🏻👍🏻👍🏻
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews