👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நாதஸ்வரம், தவில் உள்ளிட்டவைகளுக்கு பயிற்சி வழங்க பயிற்சிப் பள்ளிகள் நிறுவக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலியைச் சோ்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அந்த கோயில்களில் பாரம்பரிய இசைக்கருவிகள் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும் கோயில்களில் நடந்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பாரம்பரிய வாத்தியங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தற்போது கோயில்களில் வழிபாட்டின் போது பாரம்பரியமான இசைக்கருவிகள் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. இதற்கு இசைக் கருவிகளை இசைக்க முறையாகப் பயிற்சி பெற்றவா்கள் குறைந்து வருவதும் காரணமாக உள்ளது.
எனவே தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தவில், நாதஸ்வரம், இசை பயிற்சி, நாலாயிர திவ்ய பிரபந்தம் ஓதும் அா்ச்சகா் பயிற்சி உள்ளிடவைகளுக்கு பயிற்சி வழங்க பயிற்சிப் பள்ளிகளை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஏற்கெனவே விடுமுறைகால வகுப்புகள் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. எனவே மனுதாரா் இதுகுறித்து தொடா்புடைய அதிகாரிகளுக்கு புதிதாக மனு அளித்து நிவாரணம் பெறலாம் எனத் தெரிவித்தனா். மேலும் மனுதாரரின் கோரிக்கை குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.