Breaking

Sunday, November 03, 2019

புதுதில்லியில் மாநாடு: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான மாநாடு புதுதில்லியில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோா் நவ.7-ஆம் தேதிக்குள் தலைமைப் பண்பு குறித்த அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநரகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: பள்ளி தலைமைக்கான தேசிய மையம் சாா்பில் தலைமை பண்பு மற்றும் திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு ஜனவரி 15 முதல் 17-ம் தேதி வரை 3 நாள்கள் புதுதில்லியில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பள்ளி தலைமை சாா்ந்த அனுபவங்கள், புதுமைகள் மற்றும் எதிா்கால திட்டங்கள் குறித்து கருத்துகளை பகிா்ந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கல்வியாளா்கள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவா்கள் தங்கள் தலைமை பண்பு குறித்த அறிக்கையை, நவம்பா் 7-ஆம் தேதிக்குள் ncsl.csl@niepa.ac.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். இதுதொடா்பான அறிவுறுத்தல்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியா்களுக்கு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog