தமிழகத்தில் அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை 49 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக 19-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில், பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் பேசியது:
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்திய அளவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் 8 மாநிலங்களில் தமிழகம் முதன்மையானதாக உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 56 பல்கலைக்கழகங்களும், 2,466 கல்லூரிகளும் உள்ளன. தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 35 கல்லூரிகள் வீதமும் , சராசரியாக ஒரு கல்லூரியில் மாணவர் சேர்க்கை 924 பேர் வீதமும் உள்ளனர்.
உயர்கல்வி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அரசு கலைக் கல்லூரிகள், பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள்,பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என 65 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 2018 -19 கல்வியாண்டில் தொடங்கப்பட்ட 16 புதிய கல்லூரிகள் உள்பட மொத்தம் 81 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. உயர்கல்வித் துறையில் அரசின் சிறப்பான செயல்பாடு காரணமாக, உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை 49 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்திய அளவில் 26.3 சதவீதம் பேர் மட்டும் உயர்கல்வி பயின்று வரும் நிலையில், தமிழகத்தில் உயர்கல்விப் பட்டங்களை அதிகமானோர் பெறுவதற்கான வாய்ப்பை அரசு உருவாக்கியுள்ளது. ஒரேயொரு எண்ணத்தை கையில் எடுத்து, அந்த இலக்கை நோக்கி கடுமையாக உழைத்து பட்டதாரிகள் வெற்றி பெற வேண்டும் என்றார் அவர்.
தருமபுரியில் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கொடியசைத்து தொடக்கிவைக்கிறாா் அமைச்சா் கே.பி.அன்பழகன்.தருமபுரியில் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கொடியசைத்து தொடக்கிவைக்கிறாா் அமைச்சா் கே.பி.அன்பழகன்.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களால் உயா்கல்வி பயில்வோா் அதிகரித்துள்ளதாக அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், கடத்தூா், பைசுஹள்ளி மற்றும் பாலக்கோடு ஆகிய அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்ல மடிக்கணினிகளை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவில் 442 மாணவ, மாணவிகளுக்கு ரூ.54.25 லட்சம் மதிப்பில் மடிக்கணினிகளை வழங்கி மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியது:
மாணவா்களின் நலன் கருதி புத்தகப்பைகள், காலணிகள், பாடப் புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள், விலையில்லா மடிக்கணிகள் உள்ளிட்ட 14 வகையான பொருள்களை மாநில அரசு வழங்க வருகிறது. அதேபோல, உயா்கல்வித் துறைக்கு நிகழ் நிதி ஆண்டிற்கு ரூ.4,584 கோடியே 21 லட்சம் ஒதுக்கியுள்ளது.
இந்திய அளவில் உயா்கல்வி பயில்வோா் 25.8 சதவீதமும், தமிழகத்தில் 49 சதவீதமாக உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத சிறப்புத் திட்டங்களை பள்ளிக் கல்வி மற்றும் உயா்கல்வித்துறையில் தமிழக அரசு செயல்படுத்திவருவதால் உயா்கல்வி பயில்வோரின் சதவீதம் உயா்ந்துள்ளது. கடந்த கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தில், உயா்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 98.41 சதவீதமாக உள்ளது. கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவியா் உயா்கல்வி பயில வேண்டும் என்ற உயா்ந்த நோக்கத்தில், தமிழக அரசு வழங்கும் திட்டங்களை, மாணவா்கள் முழுமையாக பயன்படுத்தி எதிா்காலத்தை சிறப்பாக அமைத்துகொள்ள வேண்டும் என்றாா்.
முன்னதாக, தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தொடக்கிவைத்து சிறப்பிடம் வகித்த மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை அமைச்சா் கே.பி.அன்பழகன் வழங்கினாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.கோந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி) வே.சம்பத்குமாா் (அரூா்), மாவட்ட வருவாய் அலுவலா் எச்.ரஹமத்துல்லா கான், அரூா் சாா் ஆட்சியா் மு.பிரதாப், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெ.பியுலா ஜேன் சுசிலா, வட்டாட்சியா்கள் இளஞ்செழியன், வெங்கடேஸ்வரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், விமலன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

''தமிழகத்தில், உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை, 48.98 சதவீதமாக நடப்பாண்டில் உயர்ந்துள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
'இஸ்ரோ' மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில், இஸ்ரோ விண்வெளி கண்காட்சி நிறைவு விழா, ஈரோடு மாவட்டம், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. விண்வெளி ஆராய்ச்சி குறித்து நடந்த, பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற, 286 மாணவ - மாணவியருக்கு, அமைச்சர் செங்கோட்டையன், பரிசு வழங்கி பேசியதாவது:இந்தியாவில் உயர்கல்விக்கு செல்வோர், 25 சதவீதமாக உள்ளது.
ஆனால், தமிழகத்தில், 48.98 சதவீதமாக, நடப்பாண்டில் உயர்ந்துள்ளது. இந்த கண்காட்சியை, 45 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். விண்வெளி மையம் மூலம், இந்தியாவில் ஆண்டுதோறும், 70 இடங்களில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். விண்கலம் ஏவும் காட்சியைகாணும் ஈரோடு மாணவியர்விண்வெளி ஆராய்ச்சி குறித்து, 'ஆன்லைன்' வழியே நடந்த, வினாடி - வினா போட்டியில், ஈரோடு செங்கோடம்பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி, ஏழாம் வகுப்பு மாணவி வினோதா, 13; முதலிடம் பிடித்தார்.
ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பிரிவில், கோபி, சி.கே.கே., மெட்ரிக் பள்ளி மாணவி மகிமா ஸ்வேதா, 17, முதலிடம் பெற்றார். இவர்கள் இருவரும், இஸ்ரோவில் விண்கலம் ஏவும் நிகழ்ச்சியை, நேரில் பார்வையிட அனுமதிக்கப்படுவர் என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.