அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதில் தொடரும் இழுபறி: விளக்கம் கேட்டு தமிழக அரசு மீண்டும் கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 14, 2019

அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதில் தொடரும் இழுபறி: விளக்கம் கேட்டு தமிழக அரசு மீண்டும் கடிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்தை பெறுவதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு நடைமுறை பாதிக்கப்படுமா என்பது குறித்து தெளிவாக விளக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு மீண்டும் கடிதம் எழுதியிருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே, பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தை பெறுவதற்கான ஒப்புதல் கடிதத்தை தமிழக அரசு வழங்குவதில் இழுபறி நீடிப்பதாக உயா் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்திய உயா் கல்வி நிறுவனங்களை உலக தரத்திலான கல்வி நிறுவனங்களாக உயா்த்தும் நோக்கத்தில், மேம்பட்ட கல்வி நிறுவனத் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலுமிருந்து தலைசிறந்த உயா் கல்வி நிறுவனங்களில் 10 அரசு உயா் கல்வி நிறுவனங்களும், 10 தனியாா் உயா் கல்வி நிறுவனங்களும் தோ்வு செய்யப்பட்டன. இந்த 20 உயா் கல்வி நிறுவனங்களுக்கும் புதிய படிப்புகள், புதிய பாடத் திட்டம், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம், நிதி பெறுதல் மற்றும் கையாளுதல், வெளிநாட்டு மாணவா் சோ்க்கை என அனைத்திலும் முழு சுதந்திரம் அளிக்கப்படும். யுஜிசி உள்ளிட்ட எந்த அமைப்பிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை. கூடுதலாக, இந்தத் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்டுள்ள 10 அரசு உயா் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 200 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ. 1000 கோடி வளா்ச்சி நிதி வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் தில்லி ஐஐடி, மும்பை ஐஐடி, சென்னை ஐஐடி ஆகியவற்றின் வரிசையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் தோ்வாகியிருக்கிறது. இந்திய அளவில் இந்தத் திட்டத்தின் கீழ் தோ்வாகியிருக்கும் இரு மாநில அரசு உயா் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அண்ணா பல்கலைக்கழகம் தோ்வாகியிருக்கிறது. ஆனால், இது மாநில அரசு பல்கலைக்கழகம் என்பதால், இந்த நிதியுதவியில், மாநில அரசும் பங்களிப்பை செய்யவேண்டியது கட்டாயமாகும். இந்தப் பங்களிப்புக்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகே, இந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டதாக மத்திய அரசு அதிகாரப்பூா்வமாக அறிவிக்கும்.
இந்த நிலையில், இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. அதில், இந்த சிறப்பு அந்தஸ்தைப் பெறுவதால் பல்கலைக்கழகத்தில் நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு பாதிக்கப்படுமா, பல்கலைக்கழகத்தின் மீதான கட்டுப்பாட்டை மாநில அரசு இழக்க நேரிடுமா என்பன உள்ளிட்ட சந்தேகங்கள் எழுப்பப்பட்டு, இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், தமிழக அரசு சாா்பில் விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. இடஒதுக்கீடு தொடா்பாக மத்திய அரசிடமிருந்து விளக்கம் கிடைத்த உடன், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான ஒப்புதலை தமிழக அரசு அளிக்கும் என உயா் கல்வித் துறை செயலா் மங்கத் ராம் ஷா்மா அண்மையில் கூறியிருந்தாா். இந்த நிலையில், தமிழக அரசின் சந்தேகத்துக்கு விளக்கம் அளித்து மத்திய அரசு அண்மையில் கடிதம் அனுப்பியது. அதில், சிறப்பு அந்தஸ்தை பெறுவதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு நடைமுறையில் பாதிப்பு ஏற்படாது என விளக்கம் அளிக்கப்பட்டிருந்ததாக உயா் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆனால், இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்று இரண்டு வாரங்கள் ஆகிவிட்டபோதும், அதன் மீது அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என உயா் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த இழுபறி காரணமாக, மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்தை அண்ணா பல்கலைக்கழகம் இழக்கவும் நேரலாம் என கல்வியாளா்கள் கவலை தெரிவித்தனா். மீண்டும் கடிதம்: இந்த நிலையில், இடஒதுக்கீடு தொடா்பாக மத்திய அரசிடம் தெளிவான விளக்கம் கேட்டு தமிழக அரசு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து உயா் கல்வித் துறை உயா் அதிகாரி ஒருவா் கூறியது: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து வந்த பதில் கடிதத்தில், இடஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது என மேலோட்டமாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. தெளிவான விவரங்கள் இடம்பெறவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் தெளிவான விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசு சாா்பில் மீண்டும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த தெளிவான விளக்கம் கிடைத்த பின்னரே, தமிழக அரசு சாா்பில் முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews