நிதியுதவி பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 25, 2019

Comments:0

நிதியுதவி பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசு நிதி உதவி பெறும் பள்ளி நிர்வாகங்கள், மாணவர்களிடம் வசூலித்த டியூசன் கட்டணத்தை அரசுக்கு செலுத்ததால், ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு செயலாளர் மார்ட்டின் கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் 35 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் உள்ளது. இதில், பணியாற்றும் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாத சம்பளம் வழங்கப்படவில்லை. கடந்த மாதம் சம்பளம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டு, அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆசிரியர்கள் சம்பளம் கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்தனர். தற்போது, அரசு நிதி உதவி பெறும் சில பள்ளிகளின் நிர்வாகிகளின், நடவடிக்கையால் ஊதியம் கிடைப்பது கேள்வி குறியாகி உள்ளது. மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் தாங்கள், வசூல் செய்த பணத்தில் டியூசன் கட்டணமாக ரூ. 240 (ஒரு ஆண்டிற்கு) அரசுக்கு செலுத்த வேண்டும். இது கல்வித்துறையின் விதிமுறை. மாணவர்களிடம் கட்டணம் வசூலித்த வந்த தனியார் பள்ளிகள் முறையாக அரசுக்கு டியூசன் கட்டணத்தை செலுத்தி வந்தனர்.
கடந்த இரண்டு ஆண்டாக மாணவர்களிடம் வசூல் செய்த டியூசன் கட்டணத்தை அரசுக்கு செலுத்த முடியாது என தெரிவித்துள்ளனர். மாணவர்களிடம், பல்வேறு தலைப்புகளின் கீழ் மட்டுமே கட்டணம் வசூலிப்பதாகவும், டியூசன் கட்டணம் என குறிப்பிட்டு பணம் வசூலிக்கவில்லை என கூறியுள்ளனர். இதனை ஏற்காத கல்வித்துறை, மாணவர்களிடம் கட்டணம் வசூலித்த பள்ளிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய டியூசன் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும் என ஆணை பிறப்பித்துள்ளது. எனவே, மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தை பள்ளி நிர்வாகங்கள், அரசுக்கு உடனடியாக செலுத்த வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டம், தங்களுக்கு வழங்கியுள்ள சிறுபான்மை உரிமையை தவறாக பயன்படுத்தி, பணம் சம்பாதிக்கும் போக்கு கண்டனத்திற்கு உரியது. சில பள்ளி நிர்வாகிகள் செய்யும் இந்த தவறால், ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைப்பது முறையாகாது. எனவே, கவர்னர், முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு, ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்க வழி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews