👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சிவகங்கை அருகே தலைமை ஆசிரியர் திட்டியதால், பள்ளி ஆசிரியை ஒருவர் ரசாயனத்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியை சங்கீதா பள்ளியிலேயே தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தலைமை ஆசிரியர் கீதாஞ்சலி அவதூறாக பேசியதாக கூறி பள்ளியில் இருந்த ரசாயனத்தை ஆசிரியை சங்கீதா குடித்துள்ளார். சக ஆசிரியர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சிவகங்கை அடுத்துள்ள முத்துப்பட்டி அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சங்கீதா. இவர், நேற்று பள்ளி முடிந்தவுடன் மாணவர்களை விரைவாக சாலையை கடக்க அறிவுறுத்தியதாகவும், அப்போது எதிர்பாராத விதமாக மாணவர் ஒருவர் தவறி விழுந்து காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, இன்று காலை பள்ளியில் பிரார்த்தனை நேரத்தின்போது, சங்கீதாவை, தலைமை ஆசிரியர் கீதாஞ்சலி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சங்கீதா பள்ளி ஆய்வகத்தில் இருந்த சோடியம் கார்பனைட் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து, சங்கீதாவை சக ஆசிரியர்கள் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்வம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.