👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள இளங்கலை, முதுகலை படிப்புகளின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் பணிகள் நாளை முதல் தொடங்குவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
கற்றலுக்கும், தொழில்முறைக்கும் உள்ள இடைவெளியை சீராக்கும் வகையில், சென்னைப் பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 69 இளங்கலை பட்டப்படிப்புகள் மற்றும் 30 முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியோடு மாற்றியமைக்க சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்தது.
இதன்படி, இளங்கலை பிரிவில் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், தரவு அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை புதிதாக உருவாக்கும் பணிகள் நாளை முதல் தொடங்குவதாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார். B.Com., மற்றும் BBA பாடப்பிரிவுகளில் தொழில்முனைவோர் சார்ந்த புதிய பிரிவுகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறியுள்ளார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.