நாளை (27.11.2019) வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கப்படுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 26, 2019

Comments:0

நாளை (27.11.2019) வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கப்படுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நாளை (27.11.2019) வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கப் படுமா? 2019 ஆம் ஆண்டுக்கான கியார்வீன் முகைதீன் மத விடுப்பு நாள் எது? சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் அவர்கள் வெளியிட்டுள்ள, 2019 ஆம் ஆண்டுக்கான் வரையறுக்கப் பட்ட விடுப்பு (RH) பட்டியலின் படி, நாளை (27.11.2019) RH கிடையாது. கியார்வீன் முகைதீன் மத விடுப்பு 08.12.2019 ஞாயிற்றுக் கிழமை என்பதால் நாளை (27.11.2019) வரையறுக்கப் பட்ட விடுப்பு எடுக்க அனுமதி இல்லை. தற்போது ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் வருகைப் பதிவு மேற்கொள்ளப் படுவதால், உரிய விதிகளைப் பின்பற்றி RH எடுப்பது நல்லது. கியார்வீன் முஹையத்தீன் ஆண்டவர் என்ற நாளைக்கு வரையறுக்கப்பட்ட விடுப்பு (restricted holiday) உண்டு. இவ்வாண்டு கியார்வீன் முஹையத்தீன் ஆண்டவர் 8.12.2019 ஞாயிறு அன்று வருகிறது. ஆகையால் நாளை 27.11.2019 புதன் அன்று எவ்வித வரையறுக்கப்பட்ட விடுப்பு ( restricted holiday) எதுவும் இல்லை. கியாரா என்றால் 11 . அதுதான் அதாவது நாள் அதாவது முகைதீன் ஆண்டவருக்கு 11 வது நாள் விழா எடுக்கும் நிகழ்ச்சி என்று பொருள்.
தகவல் பகிர்வு: உதுமான் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்டம்
நவ.27 RH இல்லை! 'கர்வீன் முஹையதீன் அப்துல் ஹாதிர்' எதற்காக? 2019-ல் எப்போது வருகிறது? ஈராக் நாட்டின் ஜுலான் நகரில் பிறந்து பக்தாத் நகரில் துயில் கொண்டு இருக்கும் அப்துல் காதிர் ஜுலானி என்ற முஹையதீன் ஆண்டவர் நினைவாகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பள்ளிவாசல்கள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் ரபீஉல் அவ்வல் மாதம் கடைசி நாளில் (29 / 30) தர்ஹாவில் கொடியேற்றமும், ரபீஉல் ஆகிர் மாதம் 10-ம் நாள் சந்தனக்கூடு விழாவும் நடைபெறும். சந்தனக்கூடு நிகழ்ச்சியை முன்னிட்டு தந்தூரி என்னும் அன்னதானம் வழங்கப்படும்.
மதுரை தெற்குவாசல் முஹையதீன் ஆண்டவர் சந்தனக்கூடு விழாவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, கப்பல், ஊதுதான் ரதம் ஆகியவை இடம் பெற்று மதுரை நகரின் வீதிகளில் ஊர்வலமாக வந்து ரபீஉல் ஆகிர் பிறை 11 அதிகாலையில் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசப்படும். சந்தனக்கூடு விழாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ சகோதரர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழா சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இசுலாமிய மார்க்க வழக்கத்தின் படி ஒவ்வொரு மாதப் பிறப்பும் பிறையை வைத்தே கணக்கிடப்படுகிறது. ஒரு மாதம் என்பது வழக்கமாக 29 நாள்கள். 29-ம் நாள் பிறை தென்படாவிடில் அம்மாதத்தில் 1 நாள் அதிகரிக்கப்பட்டு 30 நாள்களாகக் கணக்கிடப்படும். சந்திரனின் பிறையை மையப்படுத்தியே இசுலாமிய மார்க்க நாட்காட்டி பின்பற்றப்படுவதால் தான் இசுலாமியப் பண்டிகைகளுக்கான தேதிகள் இறுதி நேரத்தில் மாற்றம் செய்யப்படுகின்றன. அவ்வல் மாதப் பிறப்பிற்கான பிறைதேட வேண்டிய நாளான 29.10.2019 செவ்வாய்க் கிழமை பிறை தென்படாததால் ஸஃபர் மாதத்தை 30 நாள்களாகப் பூர்த்தி செய்வதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னர் அறிவிப்பு செய்திருந்தது.
ஆனால், 29.10.2019 செவ்வாய்க் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு சென்னையில் பிறை தென்பட்டதாக வந்த உறுதியான தகவலின் அடிப்படையில் (29-10-19) செவ்வாய்க் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பமாவதாக அறிவித்தது. இதனடிப்படையில், முஹையதீன் ஆண்டவர் கொடியேற்றமானது ரபீஉல் அவ்வல் மாத கடைசி நாளான (29) நாளை 27.11.2019-ல் நடைபெற வாய்ப்புள்ளது. நாளையே அடுத்த மாதமான ஆகிர் மாதத்திற்கான பிறை தென்படுவதைப் பொறுத்து முஹையதீன் ஆண்டவர் சந்தனக்கூடு விழாவானது ரபீஉல் ஆகிர் மாதம் 10-ம் நாளான டிசம்பர் 7 / 8 (சனி / ஞாயிறு) தேதிகளில் நடைபெற வாய்ப்புள்ளது.கர்வீன் முஹையதீன் அப்துல் ஹாதிர்' வரையறுக்கப்பட்ட விடுப்பானது சந்தனக் கூடு விழா நடைபெறும் நாளிற்கே கடந்த காலங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதால், 7.12.2019 / 8.12.2019 தேதிகள் வரையறுக்கப்பட்ட விடுப்பாக அமைய வாய்ப்புள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews