SBI புதிய கட்டணம்: எல்லாம் மாறிவிட்டது.. எச்சரிக்கையா இருங்க! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 02, 2019

Comments:0

SBI புதிய கட்டணம்: எல்லாம் மாறிவிட்டது.. எச்சரிக்கையா இருங்க!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ தனது ஏடிஎம் கட்டணம், குறைந்தபட்ச இருப்பு தொகை, டெபாசிட் மற்றும் பணம் எடுத்தல் உள்ளிட்ட கட்டணங்களை மாற்றியுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக மாதத் சராசரியான இருப்பு தொகை 5,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.3,000 இருப்பு தொகையில் 50% பராமரிக்காதவர்களுக்கு, ரூ.10 அபராதமும், இதனுடன் ரூ.7.5 ஜி.எஸ்.டியும், இதே 50 - 75% இருப்பு தொகையை பராமரிக்காதவர்களுக்கு ரூ.12 அபராதமும், இதனுடன் ரூ.10 ஜிஎஸ்.டியும், இதே 75% இருப்பு தொகையை பராமரிக்காதவர்களுக்கு ரூ.15 ரூபாய் அபராதமும், இதனுடன் ரூ.12 ஜி.எஸ்.டியும் சேர்த்து அபராத கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இதுதான் கட்டணம் இதே செமி அர்பனில் 2,000 ரூபாய் இருப்பு தொகை குறைக்கப்பட்டுள்ளது. இதில் இருப்பு குறையும் போது, இதற்கான இருப்புத் தொகை கட்டணமும் ஜி.எஸ்டியும் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதே கிராமப்புறங்களில் 1000 ரூபாயும் இருப்பு தொகையாக இருக்க வேண்டும் என்றும் இந்த வங்கி தெரிவித்துள்ளது. 50% இருப்பு தொகை வைத்திருக்காதவர்களுக்கிடையே ரூ10+5 கட்டணமும் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும் எனவும், இதே 50 -75% இருப்பு தொகை வைக்காதவர்களுக்கு ரூ12+7.5 ஜிஎஸ்டியும், இதே 75% மேல் இருப்பு வைக்காதவர்களிடம் ரூ15+10 எனவும் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தான் இனி நெஃப்ட் கட்டணம் ஆன்லைன் தேசிய மின்னணு பண பரிமாற்றம் எனப்படும் நெஃப்ட் பரிமாற்றத்திற்கும் மற்றும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் எனப்படும் ஆர்.டி.ஜி.எஸ் சேவை இலவசம் என்றாலும், வங்கிகளில் மேற்கொள்ளும் பரிமாற்றங்களுக்கு கட்டணங்கள் உண்டு என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஆர்.டி.ஜி.எஸ் கட்டணமாக ரூ. 2 - 5 லட்சம் வரை செய்பவர்களுக்கு ரூ.20 கட்டணமும், இதே ஜி.எஸ்டி விகிதமும் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. வங்கிகளில் மேற்கொள்ளும் பரிமாற்றத்திற்கு கட்டணம் இதே நெஃப்ட் பரிமாற்றத்திற்கு ரூ.10,000 வரை பரிமாற்றம் செய்பவர்களுக்கு ரூ.2 + ஜிஎஸ்டியும், இதே ரூ.10,000 - 1 லட்சம் வரை பரிமாற்றம் செய்பவர்களுக்கு ரூ.4+ ஜிஎஸ்டியும், இதே ரூ.1 லட்சம் - 2 லட்சம் வரை பரிமாற்றம் செய்பவர்களுக்கு ரூ.12+ஜி.எஸ்டியும், இதே இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ரூ.20 ரூபாய் கட்டணமும் + ஜி.எஸ்.டியும் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. டெபாசிட் கட்டணமும் எவ்வளவு தெரியுமா? இது தவிர சேமிப்பு கணக்குகளில் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு, முதல் மூன்று பரிமாற்றங்களுக்கு கட்டணங்கள் எதுவும் இல்லை என்றும், அதன் பிறகு செய்யப்படும் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் 50 ரூபாய் கட்டணத்துடன் ஜி.எஸ்.டியும் வசூலிக்கப்படும். அதே கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையை தவிர, மற்ற கிளைகளில் செய்யப்படும் டெபாசிட் செய்யப்படுவதற்கான அதிகபட்ச வரம்பு 2 லட்சம் ரூபாய் என்றும், இதற்கு மேல் டெபாசிட் செய்ய வேண்டும் எனில் வங்கி மேலாளர் தான் இதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பணம் எடுத்தலுக்கும் கட்டணம் இதே தங்களது சேமிப்பு கணக்கில் 25,000 ரூபாயை இருப்பு தொகையாக வைத்துள்ளவர்கள் இரண்டு முறை கட்டமில்லாமல், பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும், இதே 25,000 - 50,000 வரை இருப்பு வைத்துள்ளவர்கள் 10 முறை கட்டணமில்லாமல் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்றும், இதே 50,000 - 1,00,000 லட்சம் வரை இருப்பு தொகையாக வைத்துள்ளவர்கள் 15 முறை கட்டமில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது. இதில் இலவச வரம்பை தாண்டிய ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 50 ரூபாய் கட்டணமும், ஜி.எஸ்.டி கட்டணமும் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏடிஎம் கட்டணங்கள் இவ்வளவு தான் சேமிப்பு கணக்கில் 25,000 ரூபாய் இருப்பு தொகையாக வைத்திருப்பவர்கள் மாதத்தில், எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் 5 பரிவர்த்தனைகளை கட்டணமில்லாமல் மேற்கொள்ளலாம் என்றும், இதே மற்ற ஏடிஎம்களில் 8 முறை கட்டணமில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும், இதே வாடிக்கையாளர் ரூ.25,000 முதல் ரூ.1லட்சம் வரை இருப்புத் தொகை வைத்திருப்பவர்கள், எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் வரம்பற்ற இலவச சேவைகளையும், இதே மற்ற வங்கிகளில் 8 கட்டணமில்லா சேவையினையும் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதே ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருப்பு வைத்திருப்பவர்கள் வரம்பற்ற பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் கொஞ்சம் கவனிங்க இது தவிர நிதி அல்லாத பரிவர்த்தனைக்காக 5 - 8 ரூபாய் கட்டணமும், கூடுதலாக ஜி.எஸ்.டி கட்டணமும் செலுத்த வேண்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த கட்டணங்கள் பணம் இருப்பு குறித்தான விசாரணை மற்றும் காசோலை புத்தக கோரிக்கை வைப்பது, வரி செலுத்துதல் மற்றும் பணம் செலுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் போதுமான பணமின்மை காரணமாக மறுக்கப்படும் பரிவர்த்தனைகளுக்கு 20 ரூபாய் கட்டணமும், ஜி.எஸ்.டியும் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. டெபிட் கார்டு கட்டணம் வங்கி வழங்கும் அனைத்து டெபிட் கார்டுகளும் இலவசமாக தரப்படாது. கோல்டு கார்டுக்கு ஜி.எஸ்.டி மற்றும் 100 ரூபாய் கட்டணமாகவும், இதே பிளாட்டினம் கார்டுகளுக்கு ஜி.எஸ்.டி + 300 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும் என்றும், கூடுதலாக கூரியர் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும் கார்டுகளை, தவறான முகவரி மூலம் நீங்கள் திருப்பி அனுப்பப்பட்டால்ம் நீங்கள் 100 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews