திட்டத்தின் நோக்கம்: தொழில் நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
திட்ட மதிப்பு: உற்பத்தி சார்ந்த நிறுவனமாக இருந்தால் அதன் திட்ட மதிப்பு ரூ. 25 லட்சத்திற்குள் இருக்கும்பட்சத்திலும், சேவை சார்ந்த நிறுவனமாக இருந்தால் அதன் திட்ட மதிப்பு ரூ. 10 லட்சத்திற்குள் இருக்கும்பட்சத்திலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
அரசு மூலதன மானியம்: பொதுப்பிரிவினர் கிராமப்புறத்தில் தொழில் தொடங்கினால் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 25 சதவீதம் மானியமாக பெறலாம். நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 15 சதவீதம் மானியமாக பெறலாம்.
ஆதி திராவிடர் / பழங்குடியினர் / இதர பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / முன்னாள் ராணுவத்தினர் / உடல் ஊனமுற்றோர்/ பெண்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர் கிராமப்புறத்தில் தொழில் தொடங்கினால் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 35 சதவீதமும், நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 25 சதவீதமும் மானியமாக பெறலாம்.
வயது மற்றும் வருமான வரம்பு: 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை, வருமான வரம்பும் இல்லை.
கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள்: பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவர்கள் வங்கிகள் அல்லது TIIC (TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION) மூலமாக கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.
படித்த வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்க இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற மாவட்ட தொழில் மையங்கள், கதர் கிராம தொழில் வாரியம் ஆகியவற்றை அணுகி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.kvic.org.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.