பள்ளி, கல்லூரிகளில் இன்று ‘தமிழ்நாடு நாள்’ தினத்தை கொண்டாட அரசு உத்தரவு  - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 01, 2019

Comments:0

பள்ளி, கல்லூரிகளில் இன்று ‘தமிழ்நாடு நாள்’ தினத்தை கொண்டாட அரசு உத்தரவு 

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி, கல்லூரிகளில் ‘தமிழ்நாடு நாள்’ தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றுதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க முடிவானது.
அதன்படி 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சென்னை மாகாணத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா பிரிந்து தனி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன. அந்த நாளை தமிழகம் உருவான தினமாக கொண்டாட தமிழறிஞர்கள் தொடர் கோரிக்கை வைத்தனர். அதையேற்று நடப்பு ஆண்டு முதல் நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ‘தமிழ்நாடு நாள்' இன்று (நவ.1) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ் தொன்மை குறித்த தலைப்பில் பேச்சுப் போட்டி உட்பட சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதேபோல், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் தமிழகம் உருவான வரலாறு தொடர்பான கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது தமிழக அரசு உத்தரவுப்படி நாளை, பள்ளி, கல்லுாரிகளில், தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவை உள்ளடக்கிய, 'மெட்ராஸ் ராஜஸ்தானி' என்ற சென்னை மாகாணம் இருந்தது.அரசியல் கட்சி தலைவர்கள்,மொழி போராட்ட தியாகிகள் ஆகியோரின் கோரிக்கைகளின்படி, 1956, நவ., 1ல், சென்னை மாகாணத்தில் இருந்து, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா பிரிந்து, தனியாக மொழிவாரி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த நாளை, தமிழ்நாடு நாள் என்று கொண்டாட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான அரசாணை, ஒரு வாரத்துக்கு முன் வெளியிடப்பட்டது. அதன்படி நாளை, 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படுகிறது. இதற்காக, பள்ளி, கல்லுாரிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.தமிழகம் மற்றும் தமிழின் தொன்மை குறித்து, தமிழ்நாடு நாள் விழாவில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews