Search This Blog
Wednesday, October 23, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு அலுவலர்களுக்கு பணி ஓய்வு காலம் - ஆலோசனைகள் என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட்டு 3 நாள் பயிற்சியைதொடக்கி வைத்த நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்.
பணியில் இருக்கும் போது இருந்த அதே உற்சாகத்துடன் ஓய்வுக்குப் பிறகும் அரசு ஊழியர்கள் எப்படி இருப்பது என்பதற்கான பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் சார்பிலான இந்தப் புதிய பயிற்சியை அமைச்சர் டி.ஜெயக்குமார் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இதற்குரிய புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.
பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசுகையில், அரசுப் பணியாளர்களின் பணிக் காலத்துக்கு பிந்தைய ஓய்வுக் காலத்தை பயனுள்ள வகையில் எவ்வாறு அமைத்துக் கொள்வது, அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய பணப் பயன்கள், பணப் பயன்களை எந்த வகையில் பாதுகாப்பாக முதலீடு செய்வது, உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணிப் பாதுகாப்பது, கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள ஆலோசனைகளை அவர் வழங்கினார்.
இந்தப் பயிற்சி வகுப்புகள், பணி ஓய்வுக்குப் பிறகு தாங்கள் சந்திக்கவுள்ள உடல் தொடர்பான உபாதைகளுக்கும், மன ரீதியான பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையிலும், பல்வேறு சந்தேகங்களுக்கு விடை காணும் வகையிலும் அமைந்திருந்ததாக, பயிற்சியில் பங்கேற்ற அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குநர் வெ.இறையன்பு, பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் ஸ்வர்ணா, பயிற்சி நிலையத்தின் கூடுதல் இயக்குநர் எஸ்.ஷோபா, இணை இயக்குநர் எஸ்.ராஜேந்திரன், பயிற்சி மேலாளர் மு.சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
GOVT EMPLOYEE
PENSION
ஓய்வுக் காலத்துக்குப் பின் எப்படி இருக்கலாம்?: அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்
ஓய்வுக் காலத்துக்குப் பின் எப்படி இருக்கலாம்?: அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.