பள்ளி தேர்வு தரவரிசைகளை ரத்து செய்கிறது சிங்கப்பூர்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 22, 2019

Comments:0

பள்ளி தேர்வு தரவரிசைகளை ரத்து செய்கிறது சிங்கப்பூர்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஒரு குழந்தை, முதல் மதிப்பெண் பெற்றதா அல்லது கடைசி மதிப்பெண் பெற்றதா என்பது அடுத்த ஆண்டு முதல், சிங்கப்பூரின் முதன்மை மற்றும் இடைநிலைப் பள்ளி மதிப்பெண் புத்தகங்களில் சுட்டிக்காட்டப்படாது. இந்த முயற்சியினால், "கற்றல் என்பது போட்டி அல்ல" என்பதை மாணவர்கள் உணருவார்கள் என்று கல்வி அமைச்சர் ஓங் யே குங் கூறினார். தரவரிசை மட்டுமன்றி, ஒரு குழந்தையின் மன ஆரோக்கியத்தை மனதில் கொண்டு பல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மதிப்பெண் அட்டையில், மதிப்பெண் தகவல் மட்டுமன்றி, பின்வரும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்படாது: வகுப்பு மற்றும் சராசரி நிலை குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மதிப்பெண்கள் தோல்வியுற்ற மதிப்பெண்களை அடிக்கோடிட்டுக் காட்டுதல் மற்றும் / அல்லது வண்ணமயமாக்குதல் தேர்ச்சி / தோல்வி போன்ற ஆண்டு இறுதி முடிவு ஒவ்வொரு பாட வகைகளின் தரவரிசை ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண்கள் ஒவ்வொரு மாணவரும், தங்களது கற்றல் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த அனுமதிப்பதும், ஒப்பீடுகள் குறித்து அதிக அக்கறை காட்டாமலிருப்பதை ஊக்குவிப்பதற்கும், இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு முதல், முதன்மை 1 மற்றும் 2 வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் அகற்றப்படும். அவர்கள் எந்த வகையான மதிப்பீட்டு முறையைக் கொண்டிருந்தாலும், அது ஒட்டுமொத்த தரவரிசையைப் பாதிக்காது. மதிப்பீட்டின் புதிய வடிவம் என்னவாக இருக்கும்? இந்த மாற்றங்களினால், வகுப்பறைகளில் ஒரு முழுமையான கலந்துரையாடல் நடக்க வாய்ப்பாக அமையும். அங்கு ஆசிரியர்கள் மாணவர்களின் செயல்திறனை, கலந்துரையாடல், வினாடி வினா மற்றும் வீட்டுப்பாடம் மூலம் பகுப்பாய்வு செய்வார்கள். முதன்மை 1 மற்றும் 2ம் வகுப்பு நிலைகளில், மாணவர்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு, மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைக்குப் பதிலாக, பண்புகளை அடிப்படையாகக் கொண்ட குறிப்பான்களைப் பள்ளிகள் பயன்படுத்தும். தொடக்கப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கான மதிப்பெண்கள், தசம புள்ளிகள் இல்லாமல், முழு எண்ணிக்கையாக வழங்கப்படும். மதிப்பெண்களில் கவனம் செலுத்துவதைக் குறைக்கவே இந்த முயற்சி. பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளின் போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முன்னேற்றம் குறித்த தகவல்களைத் தொடர்ந்து ஆசிரியர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வார தொடக்கத்தில் சுமார் 1,700 பள்ளித் தலைவர்களுடன் கலந்துரையாடிய திரு ஓங் கூறியதாவது: வகுப்பு அல்லது மட்டத்தில், முதல் அல்லது இரண்டாவதாக வருவது, பாரம்பரியமாக ஒரு மாணவரின் சாதனையைக் குறிக்கும் விஷயம் என்பதை நான் அறிவேன். ஆனால் இந்த குறிக்காட்டிகளை அகற்றுவது ஒரு நல்ல காரணத்திற்காக என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம், கற்றல் என்பது போட்டி அல்ல, அவர்கள் வாழ்க்கையில் தேர்ச்சி பெற வேண்டிய ஒரு சுய ஒழுக்கம் என்பதைக் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே புரிந்துகொள்கின்றனர், என்று அவர் கூறினார். "ஆயினும்கூட, மதிப்பெண் அட்டை, சில வகையான அளவுகோல்களையும் தகவல்களையும் கொண்டிருக்கும். இது, மாணவர்கள் தங்களது செயல்திறனையும், தங்களது பலம் மற்றும் பலவீனங்களையும் மதிப்பிட உதவுகிறது." இந்த நல்ல முயற்சிக்கு நமது பாராட்டுக்கள். நம் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, நாமும், ஒப்பீட்டு முறை மற்றும் தரவரிசைகளிலிருந்து வெளிவர முயற்சி செய்வோமா?
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews