Search This Blog
Saturday, October 19, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
"அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் எட்டாயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு பல ஆண்டுகளாக பதவி உயர்வு அளிக்காமல் இழுத்தடிப்பது ஏமாற்றம் அளிக்கிறது," என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் சங்கர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழகத்தில் 2003 ம் ஆண்டு 21 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியில் இருந்தனர். இதன் பின் அரசு பள்ளிகளில் இனிமேல் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் இல்லை என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 2004ல் தொகுப்பூதியத்தில் 57179 பட்டதாரி, முதுநிலை ஆசிரியர் நியமிக்கப்பட்டனர்.தொகுப்பூதியத்தில் உள்ள இவர்கள் 2006ல் காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டனர். இதில் 40 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பயனடைந்தனர்.அப்போது 21 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் 13 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில் எட்டாயிரம் பேருக்கு பல ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதற்கான முன்னுரிமை பட்டியலும் வெளியிடப்படவில்லை. இது கல்விக் கொள்கைக்கு எதிரானது.தற்போது எட்டாயிரம் பேரில் பலர் பணிநிரவலில் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர்.அவர்களுக்கு பணி நிரவலில் விலக்கு அளிக்க வேண்டும். பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியலையும் அரசு உடன் வெளியிட வேண்டும் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
Counselling
TEACHERS
Transfer
8 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இழுத்தடிப்பு :பணி நிரவலால் கடும் அதிருப்தி
8 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இழுத்தடிப்பு :பணி நிரவலால் கடும் அதிருப்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.