சைனிக் பள்ளியில் 6, 9-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.10.2019. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 21, 2019

Comments:0

சைனிக் பள்ளியில் 6, 9-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.10.2019.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசியப் பாதுகாப்புக் கல்வி நிறுவனத்தில் (National Defence Academy) சேர்க்கை பெறுவதற்கான கல்வி, உடல்நிலை மற்றும் மனநிலை போன்றவற்றை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் சைனிக் பள்ளிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
சைனிக் பள்ளி
தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் அமைந்திருக்கும் சைனிக் பள்ளியும் அவற்றில் ஒன்று. இந்தப் பள்ளியில் 2020 – 2021-ம் கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்புகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.
இடங்கள் மற்றும் தகுதி
இப்பள்ளியில் 6-ம் வகுப்பில் 90 இடங்களுக்கும், 9-ம் வகுப்பில் காலியாக இருக்கும் 6 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இப்பள்ளிக்கு மாணவிகள் விண்ணப்பிக்க இயலாது. 6-ம் வகுப்பில் சேர்க்கை பெற விரும்புபவர்கள் 31.3.2020 அன்று, 10 முதல் 12 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.
சைனிக் பள்ளி
அதாவது, 1.4.2008 முதல் 31.3.2010-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். 9-ம் வகுப்பில் சேர்க்கை பெற விரும்புபவர்கள் 13 முதல் 15 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். அதாவது, 1.4.2005 முதல் 31.3.2007-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு
இப்பள்ளியில் காலியாக இருக்கும் இடங்களில் 15% எஸ்சி பிரிவினருக்கும், 7.5% எஸ்டி பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டு இடங்கள் தவிர்த்து மீதமுள்ள இடங்களில் 67% இடங்கள் தமிழக மாணவர்களுக்கும் 33% இடங்கள் பிற மாநிலம், யூனியன் பிரதேசம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தேர்ச்சித் தரப்பட்டியலின்படி வழங்கப்படும். மேற்காணும் அனைத்து இட ஒதுக்கீட்டிலும் 25% இடங்கள் முன்னாள் ராணுவத்தினர் (Indian Army, Indian Navy & Indian Air Force) குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
சைனிக் பள்ளி விண்ணப்பங்கள்
அமராவதி நகர் சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை பெற விரும்புபவர்கள், இப்பள்ளியின் http://www.sainikschoolamaravathinagar.edu.in/ எனும் இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பிக்கலாம். பொது / படைவீரர் / முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.400, பட்டியல் / பழங்குடியினருக்கு ரூ.250 விண்ணப்பக் கட்டணம். இணையம் வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.10.2019.
நுழைவுத்தேர்வு
இப்பள்ளியின் மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு 5.1.2020 அன்று நடைபெற இருக்கிறது. 6-ம் வகுப்பு சேர்க்கைக்கு அமராவதி நகர், கோயம்புத்தூர், தஞ்சாவூர், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலும், 9-ம் வகுப்புச் சேர்க்கைக்கு உடுமலைப்பேட்டை, புதுச்சேரி மற்றும் சென்னை ஆகிய இடங்களிலும் இத்தேர்வு நடைபெறும். 6-ம் வகுப்புத் தேர்வுக்குத் தமிழ் மொழியிலும் நுழைவுத் தேர்வு எழுத முடியும். இருப்பினும், தமிழ் வழித் தேர்வை அமராவதி நகர் மையத்தில் மட்டுமே எழுத முடியும்.
சைனிக் பள்ளி மாணவர் சேர்க்கை
எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் மேலே குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறும். இப்பள்ளிக்கும் தனியார் பயிற்சி மையங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆண்டுக் கட்டணம்
இப்பள்ளியில் 2019 - 2020-ம் கல்வியாண்டில் சேர்க்கை கிடைக்கப் பெற்ற மாணவர்கள் பள்ளியில் கல்விக் கட்டணமாக (Tuition Fees) ரூ.79,860/- மற்றும் உணவுச் செலவு (Dietary Expense) ரூ.32,155/- போன்றவற்றைச் சேர்க்கையின்போது செலுத்தியிருக்கின்றனர். பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆளுநர்கள் குழு வழிகாட்டலின்படி, கல்விக் கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது.
சைனிக் பள்ளி
அதன்படி, 2020-2021-ம் கல்வியாண்டுக்கான கட்டணத்தைச் சேர்க்கையின்போது செலுத்த வேண்டியிருக்கும். இக்கட்டணத்துடன் உடைக் கட்டணம் ரூ.1,500/- முன் பணம் (Caution Money) ரூ.3,000/- (எஸ்சி, எஸ்டி ரூ.1500/-), கைச்செலவுப் பணம் (Pocket Money) ஆண்டுக்கு ரூ.10,980/- என்று பெற்றோர் செலுத்த வேண்டியிருக்கும்.
கல்வி உதவித்தொகை
இப்பள்ளியில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்குப் பெற்றோரின் மாத வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு, கீழ்க்காணும் கல்வி உதவித்தொகை ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்படும்.
1. ரூ.6000/- வரை உள்ளவர்களுக்கு - ரூ.40,000/-
2. ரூ.6001/- முதல் ரூ.12,000/- வரை – ரூ.30,000/-
3. ரூ.12,001 முதல் ரூ.15,000/- வரை – ரூ.22,000/-
4. ரூ.15,001 முதல் ரூ.18,000/- வரை – ரூ.15,000/-
5. ரூ.18,001 முதல் ரூ.21,000/- வரை – ரூ.10,000/-
6. ரூ. 21,000/-க்கு மேற்பட்டவர்களுக்கு உதவித்தொகை எதுவும் இல்லை.
படைவீரர்களில் NCO, OR பணிகளில் இருக்கும் ராணுவத்தினர் (Army) மற்றும் அதற்கு இணையான பணிகளில் கடற்படை (Navy), விமானப்படை (Air Force) பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ,32,000/- முழு உதவித் தொகையாகவும், JCO பணி மற்றும் அதற்கு இணையான பணியிலிருப்பவர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.16,000/- எனப் பாதி உதவித் தொகையும் வழங்கப்படும். அலுவலர் பணியிலிருப்பவர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை இல்லை.
சைனிக் பள்ளி
இப்படிப்புக்கான சேர்க்கை குறித்து மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள் http://sainikschoolamaravathinagar.edu.in/எனும் பள்ளியின் இணையதளத்தைப் பார்வையிடலாம். அல்லது 04252 – 256246, 256206 எனும் பள்ளியின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews