அரசாணை (நிலை) எண்.327 Dt: October 21, 2019 ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி – 1-7-2019 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 22, 2019

Comments:0

அரசாணை (நிலை) எண்.327 Dt: October 21, 2019 ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி – 1-7-2019 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தொடர்ந்து ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர் களுக்கு வழங்கியது போல் எங்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கியதன் அடிப்படையில் ஓய்வூதியதார்களுக்கும் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படியை 1-7-2019 முதல் கணக்கிட்டு கூடுதல் ஊதியமாக 5 சதவீதம் வழங்கப்படும். அதன்படி, தற்போதுள்ள 12 சதவீத அகவிலைப்படி 17 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். ஜூலை முதல் செப்டம்பர் மாதத்திலான 3 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை (வங்கி) மூலம் வழங்கப்படும். இதன் மூலம் 6 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். CLICK HERE TO DOWNLOAD G.O PDF
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews