👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சீன அதிபர் ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி வருகை காரணமாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மாமல்லபுரத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் இருதலைவர்களின் சந்திப்பு நடைபெற உள்ளதையொட்டி, போக்குவரத்து மாற்றம், பாதுகாப்பு என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பை கருதி, 2 நாட்களும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. சென்னை மாவட்டத்தில், கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரங்கிமலை, பல்லாவரம், மீனம்பாக்கம் மற்றும் திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் வரையிலான பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறினர். விடுமுறை குறித்த அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.