'குரூப் - 2' தேர்வு முறை, பாடத்திட்டம் மாற்றம்: TNPSC அதிரடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 28, 2019

Comments:0

'குரூப் - 2' தேர்வு முறை, பாடத்திட்டம் மாற்றம்: TNPSC அதிரடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஒவ்வொரு முறையும், ஐந்து லட்சம் பேருக்கு மேல் எழுதும், டி.என்.பி.எஸ்.சி.,யின், குரூப் - 2 தேர்வு முறையும், பாடத்திட்டமும் மாற்றப்பட்டு உள்ளன. முதல்நிலை தேர்வுஅரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் - 2 தேர்வுக்கு, பழைய முறையில், முதல் நிலை தேர்வு, 200 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி நேரம் நடத்தப்பட்டது. பொது அறிவு பாடத்தில், பட்டப்படிப்பு அளவில், 75 கேள்விகளும், திறன் அறிதல் தாளில், 10ம் வகுப்பு தகுதியில், 25 கேள்விகளும் கேட்கப்பட்டன. தமிழ் மற்றும் ஆங்கிலம் தாளில், 10ம் வகுப்பு தகுதி அளவில், 100 கேள்விகள் இடம் பெற்றன. இந்த தாளில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண், 90 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. புதிய முறையில், ஏற்கனவே அமலில் இருந்த, தமிழ் மற்றும் ஆங்கில தாள் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், பொது அறிவு பாடத்தில், பட்டப்படிப்பு அளவில், 175 கேள்விகள் இடம் பெற உள்ளன. திறன் அறிதல் தாளில், 10ம் வகுப்பு தகுதியில், 25 கேள்விகள் இடம்பெறும். மூன்று மணி நேரம், இந்த தேர்வு நடக்கும். குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண், 90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, பிரதான தேர்வு நடத்தப்படுகிறது.
பழைய முறையில், பொது அறிவு தாளில், பட்டப்படிப்பு அளவில், 300 மதிப்பெண்களுக்கு, விரிவாக பதில் எழுத வேண்டும்.இதில், தேர்ச்சி மதிப்பெண்ணாக, 102 நிர்ணயிக்கப்பட்டது. நேர்முக தேர்வு மற்றும் பதிவேடு தயாரித்தலுக்கு, 40 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.புதிய முறைப்படி பிரதான தேர்வில், 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும். கேள்வித்தாளில், முதல் பகுதியில், தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கும் வகையில், தலா, 25 மதிப்பெண்ணுக்கு, நான்கு கேள்விகள் இடம்பெறும். மனப்பாடத்திற்கு, 'செக்'இதில் குறைந்தபட்சம், 25 மதிப்பெண் பெறாதவர்களின், இரண்டாம் பகுதி விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படாது. இரண்டாம் பகுதியில், 200 மதிப்பெண்களுக்கு, தலா, 20 மதிப்பெண் வீதம், 10 கேள்விகள் இடம்பெறும். இதில், திருக்குறள் குறித்தும், அலுவல் சார்ந்த கடிதம் எழுதுவது குறித்தும், தலா, இரண்டு கேள்விகள் கேட்கப்படும். இந்த பிரிவுக்கு, தனியாக தேர்ச்சி மதிப்பெண் கிடையாது. இரண்டு தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்; 40 மதிப்பெண்களுக்கு நேர்முக தேர்வு நடக்கும். சில பதவிகளுக்கு, நேர்முக தேர்வு கிடையாது. இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
மின்னணு ஆளுமைபுதிய முறைப்படி, மனப்பாட முறையில் படிப்பவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாது. சரியான மொழி அறிவு மற்றும் பொது அறிவு திறன் இருந்தால், எளிதாக தேர்ச்சி பெறலாம். தற்போதைய நிகழ்வுகள், அரசின் வளர்ச்சி, அதற்கான காரணங்கள், தமிழக பண்பாடு, கலாசாரம், திருக்குறள், அலுவலகங்களில் பணியாற்று வதற்கான அடிப்படை எழுத்து மற்றும் மொழி திறன் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும்.தற்போதைய இந்திய அரசியல், பொருளாதார மாற்றம், இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் வரலாறு, திராவிட கட்சிகளின் வளர்ச்சி, பெண்ணுரிமை, மின்னணு ஆளுமை போன்ற அனைத்து வகை தகவல்களையும் படித்தவர்கள் மட்டுமே, இனி தேர்வில் வெற்றி பெற முடியும்.தமிழ் தெரியாவிட்டால், 'அவுட்''குரூப் - 2ஏ' பதவிகளுக்கு, ஏற்கனவே, ஒரே தாளில், 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தற்போது, குரூப் - 2ஏ தேர்வு, முதல் நிலை மற்றும் பிரதானம் என, இரண்டு தாள்களாக மாற்றப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில், குரூப் - 2 மற்றும் குரூப் - 2ஏ என, இரண்டு வகை பதவிகளுக்கும், முதல் நிலை மற்றும் பிரதான தேர்வு என, இரண்டும் நடக்கும். புதிய தேர்வு முறைப்படி, தமிழும், ஆங்கிலமும் முழுமையாக தெரியாதவர்கள் தேர்ச்சி பெற முடியாது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ ஆகிய 2 பிரிவு பணியிடங்களுக்கும் இனி ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த இரு பிரிவுகளுக்கும் முதனிலை (டழ்ங்ப்ண்ம்ள்) மற்றும் முதன்மை (ஙஹண்ய்ள்) எழுத்துத் தேர்வு கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. இரண்டு பணியிடங்களுக்கும் தனித்தனியே தேர்வுகள் நடத்துவதால் தேவையற்ற கால விரயமும் வரிப்பணமும் வீணாவதுடன் விண்ணப்பதாரர்களும் இரண்டுமுறை தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது. எனவே இரண்டுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டம்- தமிழுக்கும் தமிழகத்திற்கும் முக்கியத்துவம்: இதுநாள் வரை குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதனிலை தேர்வுகளில் பொது அறிவு 100 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்களும் கேட்கப்பட்டு வந்தன. விண்ணப்பதாரர்கள் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதி தெரிவாக முடியும். அதாவது தமிழ் தெரியாதவர்கள் கூட இவ்வகையான தேர்வுகளை எழுத முடியும் என்ற நிலை இருந்தது. அதனால் தற்போது பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டு, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் முதனிலை (டழ்ங்ப்ண்ம்ள்) தேர்வின் பாடத்திட்டத்தில் இரண்டு அலகுகள் (மய்ண்ற்ள்) சேர்க்கப்பட்டுள்ளன. முதனிலைத் தேர்வில் நீக்கப்பட்ட பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கில பகுதிகள் முதன்மை எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் கூடுதல் முக்கியத்துவத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன. முதனிலைத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் தமிழ் சமூகத்தின் வரலாறு, அகழ்வாராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகள், சங்ககாலம் தொட்டு தற்காலம் வரையிலான தமிழ் இலக்கியம், சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு,19 -ஆம் நூற்றாண்டு முதல் 20 -ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் இயக்கங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. திருக்குறளுக்கு முக்கியத்துவம்: மிக முக்கியமாக திருக்குறளுக்கு தனியே முக்கியத்துவம் தரப்பட்டு பல்வேறு தலைப்புகளில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இத்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் சமூக நீதி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகள், சமூக நல்லிணக்கம், தமிழகத்தின் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் போன்ற தமிழகம் தொடர்பான பல்வேறு தலைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
முதன்மை எழுத்துத் தேர்வில் மொழிப்புலமை: விண்ணப்பதாரர்கள், கண்டிப்பாக தமிழக வரலாற்றையும் தமிழ் மொழியையும் அறிந்தவர்களாகவும், தமிழக அரசு அலுவலகங்களில் கோப்புகள் எழுதும் திறன் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தேர்வாணையம் கருதுவதால், முதன்மைத் (ஙஹண்ய்ள்) தேர்வில், தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு; ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்பு; சுருக்கி வரைதல்; கட்டுரை எழுதுதல் ; குறிப்புகளைக் கொண்டு விளக்கி எழுதுதல்; திருக்குறள் பற்றி கட்டுரை, அலுவலகக் கடிதம் எழுதுதல் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. தமிழக வரலாற்றுக்கும் முக்கியத்துவம்: முதன்மை எழுத்துத் தேர்விலும், தமிழுக்கும், தமிழகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் தரும் வகையில் தமிழர் நாகரீகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, சங்க கால இலக்கியம், தமிழகத்தின் இசைப் பாரம்பரியம், நாடகக் கலை, பகுத்தறிவு இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கங்கள், பெண்ணியம் மற்றும் தற்கால தமிழ் மொழி குறித்த பாடத்திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews