பள்ளிக்கு கொடுக்கப்பட்ட Laptap இல் தேவையின்றி Data வீணாவதை தடுக்க வழிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 10, 2019

பள்ளிக்கு கொடுக்கப்பட்ட Laptap இல் தேவையின்றி Data வீணாவதை தடுக்க வழிகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அன்பான ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். அனைத்து பள்ளிகளுக்குமே Laptop வழங்கப்பட்டுள்ளது. தற்போது நமக்கு வழங்கப்பட்டுள்ள Laptop-ல் Windows 10 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயங்குதளம் மற்ற இயங்குதளங்களை விட அதிக வசதிகள் கொண்டது. ஆனால் இதில் இருக்கும் ஒரு மிகப்பெரிய பின்னடைவு எதுவென்றால் இந்த இயங்குதளம் அதிகப்படியான டேட்டாவை எடுத்துக் கொள்ளும் என்பது தான். நாம் பெரும்பாலும் தினமும்1.5 GB என்ற அளவிலேயே டேட்டாவை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த இயங்குதளமானது 15 நிமிடங்களிலேயை 1.5GB டேட்டாவைத் தீர்த்து விடும். நாம் internet connection கொடுத்துவிட்டாலே போதும் நாம் பயன்படுத்தாமல் இருந்தாலும் நமது டேட்டா தீர்ந்து விடும்.
இதற்கு காரணம் இந்த விண்டோஸ்10 தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் தன்மை கொண்டது. இவ்வாறு நமது டேட்டா வீணாவதை பின்வரும் வழிமுறைகளைக் கையாண்டு தவிர்த்து கொள்ளலாம். உங்கள் லேப்டாப்பில் Windows+R பட்டனைக் கிளிக் செய்யவும். கீழே தோன்றுகின்ற Search box ல் services.msc என்று டைப் செய்து enter செய்யவும். தற்போது திரையில் தோன்றும்dialog box ல் windows update என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து double click செய்வும். தற்போது திரையில் தோன்றும் புதிய box ல் start up type என்ற ஆப்ஷனுக்கு எதிரில் இருக்கும் கட்டத்தில் automatic அல்லது manual என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் Automatic (start delay) Automatic Manual Disabled என்று 4 ஆப்ஷன்கள் தோன்றும்.
அதில் disabled என்பதனைத் தேர்வு செய்து அதன் கீழிருக்கும் கட்டத்தில் stop என்பதனைத் தேர்வு செய்து OK கொடுக்கவும். பின்னர் மீண்டும் windows update ல் Double click செய்து service status stopped என உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளவும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் நமது டேட்டா தேவையின்றி வீணாவதை தடுக்கலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews