👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் பழைய தமிழ், ஆங்கில நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணி துவங்கியது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக நூலகம் மற்றும் சென்னை பொது நூலக இயக்ககம் ஆகியவை இணைந்து 60 ஆண்டுகளுக்கு மேலான பழமையான அரியவகை தமிழ் இலக்கியங்கள், ஆங்கில இலக்கிய நூல்கள், ஓலைச்சுவடிகள் உட்பட பல்வேறு பழமையான நூல்களை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
அந்த நூல்களை தமிழகத்திலேயே முதல்முறையாக மதுரை காமராஜர் பல்கலையில் கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணி துவங்கியது. இதனை துணைவேந்தர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படும் இந்த நூல்கள் அனைத்தையும் பல்கலைக்கழக இணையதளத்தில் ஏற்றப்படும். அதன் பின்னர் இணையதளத்தில் இருந்து மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது வரும் காலங்களில் மாணவர்களுக்கு குறிப்பாக, தமிழ் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என பல்கலைக்கழக நூலகர் சுரேஷ் தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U