பின்லாந்து நாட்டு பாணியில் பள்ளிகளில் தொழில் பயிற்சி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 07, 2019

பின்லாந்து நாட்டு பாணியில் பள்ளிகளில் தொழில் பயிற்சி?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பின்லாந்து நாட் டைப்போல தமிழகத்தில் மாணவர்களுக்குத் தொழில் பயிற்சி அளிப்பது குறித்து ஆராயப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: பள்ளிக் கல்வித் துறையில் 12 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத்திட்டம், தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பாடத் திட்டத்தில் கியூ ஆர் கோடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து ஆடியோ மூலம் மாணவர்கள் பாடங்களைக் கற்க முடியும். ஐசிடி திட்டத்தின் மூலம் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வகுப்பறைகள், செப்டம்பர் மாத இறுதிக்குள் இணைய வசதியுடன் கணினிமயமாக்கப்படும். மத்திய அரசின் நிதி உதவியோடு 70 ஆயிரம் பள்ளிகளுக்கு கரும்பலகைக்கு மாற்றாக ஸ்மார்ட் போர்டு வழங்கப்படும்.
நீட் தேர்வுப் பயிற்சியைப் பொருத்தவரை தனியார் நிறுவனங்கள் நாள்தோறும் முழுமையான பயிற்சியை அளிக்கின்றன. ஆனால், அரசுப் பள்ளி மாணவர்கள் வாரத்துக்கு இரு நாள்கள், மாலை நேரங்களில் நீட் தேர்வு பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு குறைவான நேரமே பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இதுவரை 76 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 38.49 சதவீத மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்டுக்காண்டு தேர்ச்சி விகிதம் உயரும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பிளஸ் 2 பாடத் திட்டத்தில் நீட், ஐஐடி, ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்குத் தேவையான விடைத்தாள்கள் உள்ளன. மாணவர்கள் இதைப் படித்தாலே போதுமானது. எனவே, இதன் மூலம் கூடுதலான மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் நிலை உருவாகும். இதற்கென 412 நீட் தேர்வு பயிற்சி மையங்களில் ஒரு வார காலத்தில் பயிற்சி தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டு 2,742 மாணவர்களும், அதற்கு முந்தைய ஆண்டு 3,119 மாணவர்களும் அத்தகைய பயிற்சியைப் பெற்றுள்ளனர்.
பின்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் தொழில் சார்ந்த கல்வி கற்பிக்கப்படுகிறது. இரண்டு வயதிலேயே பள்ளிக்கு அனுப்புகின்றனர். 6 வயது ஆன பின்னரே கல்வி கற்றுத் தருகின்றனர். அதுவரை அந்த மாணவர்களுக்கு உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள், நல்ல நெறிமுறைகளைக் கற்றுத் தருகின்றனர். பள்ளிக்கு வர வேண்டும் என சிறு குழந்தைகள்கூட விரும்பும் சூழ்நிலை அங்கு உள்ளது. அங்கு அரசே பள்ளிகளை முழுமையாக நடத்துகிறது. 9 ஆம் வகுப்பு படிக்கும்போது மாணவர்களுக்கு தொழில் திறன் சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்கான வசதிகள் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 18 வயதுக்குப் பிறகு தங்கள் பெற்றோர் உதவி இல்லாமல் வாழ்க்கை நடத்தும் அளவுக்கு அங்கு கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன. இதேபோல மாற்றங்களைக் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். தமிழக அரசின் பாடத்திட்டம், பல்வேறு துறை சார்ந்த தொழிற்பயிற்சி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி எத்தகைய பயிற்சி அளிக்கலாம் என ஆய்வு செய்யப்படும் என்றார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பின்லாந்து நாட்டின் கல்விச்சூழல், மாணவர்களின் திறன் மற்றும் கற்கும் கற்பிக்கும் முறைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பின்லாந்து நாட்டில் படிக்கும் மாணவர்கள், வாழ்க்கையை எதிர்கொள்ளும் வகையிலும், சமூகத்தில் சிறந்த அந்தஸ்தை ஏற்படுத்தும் வகையிலும் கல்வி கற்றுக் கொடுக்கப்படுவதாக கூறிய அமைச்சர், அங்கு உயர்நிலை கல்வி படிக்கும் மாணவர்கள் படிக்கும் போதே தொழிற்சாலைகளுக்கு சென்று தொழிற்கல்வியை கற்று கொள்வதாக கூறினார்.
இதனால் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் பெற்றோர்களின் துணையின்றி அந்த மாணவர்களால் சுயமாக வாழ முடிவதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார். இதேபோல் தமிழக மாணவர்களிடையே தொழிற்கல்வியை மேம்படுத்தும் வகையில் தமிழக ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பின்லாந்தில் உள்ள தமிழ் நூலகத்திற்கு வரும் 15 நாட்களுக்குள் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரம் தொடர்பான புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும், மேலும் தமிழக பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்டுள்ள 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பாடபுத்தகங்களும் அங்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விடுமுறை நாட்களில் தொழிற்சாலைக்கு சென்று பணியை கற்று கொள்ளவும், படித்து முடித்ததும் அதே தொழிற்சாலையில் பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதை தொடர்ந்து தமிழகத்தில் புதிதாக கொண்டு வரப்படவுள்ள கல்வி முறையில் தொழிற்கல்வியும் சேர்க்கப்படவுள்ளதாக செங்கோட்டையன் கூறினார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews