👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறுபான்மை நிறுவனங்கள் பாரபட்சம் காட்டுவதாக சிறுபான்மை மக்கள் சார்பில் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தின் சார்பில், சிறுபான்மை மக்களின் கோரிக்கைகள் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சிறுபான்மை ஆணையத் தலைவர் ஜான் மகேந்திரன் தலைமை வகித்தார். ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மா.வள்ளலார், மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் பேசியது: சிறுபான்மையினரின் வளர்ச்சிக்கு அரசு செயல்படுத்தப்படும் திட்டங்களில் 10 சதவீதம் மட்டுமே இந்த மக்களுக்கு கிடைத்து வருகிறது. தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், சிறுபான்மை ஆணையத்திற்கு இல்லாத சூழல் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தரிசாக கிடக்கும் வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை, வாடகை அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இஸ்லாமிய சமூகத்தினருக்கு அதிக அளவிலான சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்து பேசிய ஆணையத்தின் செயலர் மா.வள்ளலார், சிறுபான்மை ஆணையத் தலைவராக தொடக்க காலத்தில் இஸ்லாமியர்களுக்கே அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் இஸ்லாமியர்களை விட கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. இதன் காரணமாக கிறிஸ்தவர்களுக்கு தற்போது தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் விவரம்: சிறுபான்மையினர் உரிமை தலித் கிறிஸ்தவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. அரசின் நிதியுதவியுடன் செயல்படும் பல பள்ளிகள், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. வேலைவாய்ப்பு முன் பதிவுக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கும் திருச்சபைகள், ஆசிரியர்கள் நியமனத்தில் பணம் வழங்குவோருக்கு மட்டுமே பணி வாய்ப்பு அளிக்கின்றன. பணி நியமனம், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட எந்த விவரங்களைக் கேட்டாலும், சிறுபான்மை நிறுவனங்கள் என்பதால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்க முடியாது என பதில் அளிக்கின்றனர். தலித் கிறிஸ்தவர்களுக்கு, கிறிஸ்தவ நிறுவனங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 65 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றனர்.
இதற்கு பதில் அளித்த ஆணையத்தின் தலைவர் ஜான் மகேந்திரன், சிறுபான்மையினருக்குள்ளேயே பல முரண்பாடுகள் நிலவுவது வருத்தம் அளிக்கிறது. திருச்சபைகளின் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்படும் என்றார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U