👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி கல்வித் துறையில், 19 ஆயிரத்து, 427 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத, தற்காலிகப் பணியிடங்களை, நிரந்தர பணியிடங்களாக மாற்றி அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், நிரந்தர பணியிடங்களாகவும், தற்காலிக பணியிடங்களாகவும், பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், தற்காலிக பணியிடங்களுக்கு, பணியிட தொடர் நீட்டிப்பு வழங்குவதில், காலதாமதம் ஏற்படுகிறது.இதை தவிர்க்க, 'முதல் கட்டமாக, 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள், நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும்' என, அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், இயக்குனர், முதன்மை கணக்கு அலுவலர், வட்டார கல்வி அலுவலர், ஆய்வு அலுவலர் என, முதல் கட்டமாக, 19 ஆயிரத்து, 427 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத, தற்காலிகப் பணியிடங்களை, நிரந்தரமாக மாற்றி அமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U