ஆசிரியர் பணி தேர்வர்கள் பயிற்சி பெற டி.ஆர்.பி., ஏற்பாடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 23, 2019

Comments:0

ஆசிரியர் பணி தேர்வர்கள் பயிற்சி பெற டி.ஆர்.பி., ஏற்பாடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுத உள்ளவர்கள், ஆன்லைன் வாயிலாக, கணினி பயிற்சி மேற்கொள்ளும்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பதவியில், 2,144 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, வரும், 27, 28 மற்றும், 29ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் நடக்கிறது. இந்த தேர்வை, 154 மையங்களில், 1.85 லட்சம் பேர் எழுத உள்ளனர்.
தேர்வு எழுதுவோருக்கு, முக்கிய அறிவிப்பு ஒன்றை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த போட்டி தேர்வு, கணினி வாயிலாக நடக்க உள்ளது. அதனால், தேர்வின் தன்மைகளை தெரியும் வகையில், கணினி வழி மாதிரி தேர்வுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்வர்கள், http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில், தங்களின் பதிவு எண்ணை பயன்படுத்தி, மாதிரி கணினி வழி தேர்வில் பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும். தேர்வு குறித்து புரிந்து கொள்ள பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews