நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்?: மேலும் இருவர் முறைகேடாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகப் புகார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 27, 2019

Comments:0

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்?: மேலும் இருவர் முறைகேடாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகப் புகார்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மேலும் இரு மாணவர்கள் முறைகேடாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. கோவையில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவரும், ஒரு மாணவியும் அவ்வாறு சேர்ந்ததாகத் தெரிகிறது. அவர்கள் இருவரின் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு புகைப்படங்களும், மருத்துவ இடம் ஒதுக்கீடு செய்ததற்கான அனுமதிக் கடிதத்தில் இருந்த புகைப்படங்களும் வேறு வேறாக உள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பில் இந்த உண்மை தெரியவந்ததாகவும், அதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர் முறைகேடாக சேர்ந்த விவகாரத்தால் உருவான சர்ச்சைகளே இன்னும் அடங்காத நிலையில், தற்போது மேலும் இரு மாணவர்களின் சேர்க்கையிலும் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்திருப்பது பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நிகழாண்டு நீட் தேர்வினை எழுதினார். சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் தேர்வெழுதிய அவர், 351 மதிப்பெண்கள் பெற்றார். கலந்தாய்வில் முதலில் காஞ்சிபுரம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்த அவர், அதன் பின்னர் நடைபெற்ற சிறப்புக் கலந்தாய்வில் பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு பெற்றார். அதைத் தொடர்ந்து அந்த மாணவர் பிஎஸ்ஜி கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார்.
இந்நிலையில், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின் பேரில் மாணவர்களது சான்றிதழ்களைச் சரிபார்த்தபோது, சம்பந்தப்பட்ட மாணவரின் நீட் நுழைவுத் தேர்வு அனுமதிச் சீட்டில் இருந்த புகைப்படத்துக்கும், கல்லூரி இட ஒதுக்கீட்டு அனுமதி கடிதத்தில் இருந்த புகைப்படத்துக்கும் மாறுபாடு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் ஆள்மாறாட்டம் செய்து எம்பிபிஎஸ் இடம் பெற்றிருப்பதற்கானமுகாந்திரம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதேபோன்று, தருமபுரி மாவட்டம், கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் நிகழாண்டு நீட் தேர்வினை சேலத்தில் உள்ள நாலேஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் எழுதினார். அதில் அவர் 437 மதிப்பெண்கள் பெற்று கலந்தாய்வில் பிஎஸ்ஜி கல்லூரியைத் தேர்வு செய்தார். அவரது சான்றிதழ்களில் உள்ள புகைப்படங்களிலும் மாறுபாடு காணப்படுவதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அந்த இருவரது விவரங்களையும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கும், பல்கலைக்கழகத்துக்கும் சம்பந்தப்பட்ட கல்லூரி அனுப்பியுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபுவுக்கும் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சரும், மருத்துவக் கல்வி அதிகாரிகளும் கூறி வரும் நிலையில், தற்போது வெளியாகி வரும் தகவல்கள் அதற்கு முற்றிலும் முரண்பட்டுள்ளன. நீட் தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்துவதால், அதில் நடைபெறும் முறைகேடுகளுக்கு தமிழக அரசு பொறுப்பேற்காது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். ஒரு வகையில் அது சரி என்றாலும், மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடாக மாணவர்கள் சேருவதை தடுப்பதற்கான தார்மிகப் பொறுப்பு அரசுக்கு இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது.
நிகழாண்டில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு உயர் நிலை விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்பதே தற்போது பரவலாக முன்வைக்கப்படும் கோரிக்கை. கோவை தனியார் மருத்துவ கல்லூரியில் இரண்டு மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா நீட் தேர்வை மகாராஷ்டிரா-வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதி தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களின் ஆவணங்கள் மீண்டும் சரி பார்க்கப்பட்டது. அந்த வகையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற ஆவண சரி பார்ப்பில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து 2 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.இது தொடர்பாக சென்னையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு, சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி புகார் கடிதம் அளித்துள்ளது. அதில் சம்மந்தப்பட்ட மாணவனின் நீட் நுழைவுத்தேர்வு புகைப்படத்திற்கும், அனுமதி கடித புகைப்படத்திற்கும் வித்தியாசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் கோவையிலும் ஆள்மாறாட்டம் செய்து இருவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாக மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் வெங்கடேசன் மகன் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றிருப்பதாக அந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் வந்தது.
அதன் அடிப்படையில் கல்லூரிப் பேராசிரியர்கள், உதித் சூர்யாவிடம் விசாரணை செய்தனர். இதில் உதித் சூர்யா, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், அவர் திடீரென தலைமறைவானார். இதையடுத்து உதித் சூர்யா, நீட் தேர்வு கூட நுழைவுச் சீட்டை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர். அப்போது, அதில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்துக்கும், உதித் சூர்யாவுக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் தேனி மாவட்ட காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் உதித் சூர்யா மீதும், அவருக்கு தேர்வு எழுதிய நபர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், உதித் சூர்யா ஏற்கெனவே இரு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்ததால், மூன்றாவது முறையும் தோல்வியடைந்துவிட்டால் மருத்துவம் படிக்க முடியாது என்பதால், உதித் சூர்யா ஏற்கெனவே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு நபரை ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்திருப்பதும், முறைகேட்டில் சிக்காமல் இருப்பதற்கு மும்பையில் தேர்வு எழுதியிருப்பதும் தெரியவந்தது.
இவ் வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி கடந்த 23-ஆம் தேதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தேனி மாவட்ட போலீஸார், சிபிசிஐடி அதிகாரிகளிடம் வழக்குக்குரிய ஆவணங்களை ஒப்படைத்தனர். மேலும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அதேவேளையில் தேனி மாவட்ட காவல்துறையின் தனிப்படையும், சிபிசிஐடி போலீஸாரும் இணைந்து தலைமறைவாக இருந்து வந்த உதித் சூர்யாவை தேடி வந்தனர். இந்த நிலையில் உதித் சூர்யா குடும்பத்தினர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனிடையே நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உதித் சூர்யா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு விசாரணை நடத்திய உயர்நீதிமன்ற மதுரை கிளை மாணவர் உதித் சூர்யாவுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததோடு, மனுவை நிராகரித்தது. இதையடுத்து தனிப்படையினர், உதித் சூர்யாவை திருப்பதியில் நேற்று புதன்கிழமை பிடித்தனர். பின்னர் அங்கிருந்து ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின்னர் உதித் சூர்யாவையும், அவர் பெற்றோரையும் தேனி மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், நீட் தேர்வில் கோவையிலும் ஆள்மாறாட்டம் செய்து இருவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாக மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நீட்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மேலும் 2 பேர் கோவையில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவரும், ஒரு மாணவியும் சேர்ந்து படித்து வருவதாக புகார் வெளியாகி உள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் 2 மாணவ, மாணவரின் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர்களது நீட் நுழைவுச்சீட்டு புகைப்படமும், அனுமதி கடித புகைப்படமும் வேறு வேறாக இருப்பதாகப் புகார் தெரிவித்துள்ள கல்லூரி நிர்வாகம், அவர்களின் புகைப்பட வித்தியாசம் பற்றி விசாரணை நடத்த சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அந்த கல்லூரி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் பிடிப்பட்டுள்ள நிலையில், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியிலும் 2 பேர் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக வெளியாகும் தகவல் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews