ஐஐடியில் படிக்க JAM 2020: புதிய மாற்றத்துடன் தேர்வு அட்டவணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 10, 2019

ஐஐடியில் படிக்க JAM 2020: புதிய மாற்றத்துடன் தேர்வு அட்டவணை வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
எம்.எஸ்சி. படிப்புகளை இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க விரும்புவோருக்கான ஜாம் தேர்வுக்கு அட்டவணை வெளியாகியுள்ளது. ஜாம் (JAM) எனப்படும் முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த தேர்வு (Joint Admissions test for Master's) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 2004ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இத்தேர்வு எம்.எஸ்சி, முனைவர் பட்ட ஆய்வுடன் இணைந்த எம்.எஸ்சி போன்ற படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படுகிறது. 2020ஆம் ஆண்டுக்கான இத்தேர்வுக்கு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2020ல் ஜாம் தேர்வை ஐஐடி கான்பூர் நடத்துகிறது. இந்த முறை ஆறு பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே ஜாம் தேர்வு நடத்தப்பட உள்ளது. Biological Science பாடப்பிரிவு மட்டும் நீக்கப்பட்டுள்ளது. Biotechnology, Mathematical Statistics, Physics ஆகியவற்றுக்கு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தேர்வு நடக்கும். Chemistry, Geology, Mathematics ஆகியவற்றுக்கு பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்வு நடைபெறும்.
இதேர்வு எழுத விருப்பமும் தகுதியும் கொண்ட மாணவர்கள் http://jam.iitk.ac.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். முக்கிய தேதிகள் ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு ஆரம்பிக்கும் நாள் – செப்டம்பர் 5, 2019 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – அக்டோபர் 8, 2019 (மாலை 5.30 மணி) ஆன்லைனில் அட்மிட் கார்டு வெளியாகும் நாள் – ஜனவரி 7, 2020 ஜாம் 2020 தேர்வு நடைபெறும் நாள் – பிப்ரவரி 9, 2020 ஜாம் 2020 தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் – மார்ச் 9, 2020
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews