பள்ளிகளில் திருக்குறளை சிறப்புப் பாடமாக்க கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 02, 2019

பள்ளிகளில் திருக்குறளை சிறப்புப் பாடமாக்க கோரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிகளில் திருக்குறளை சிறப்பு நீதிநெறி பாடமாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் முன்னாள் எம்.பி. தருண் விஜய் கோரிக்கை விடுத்தார். தமிழகத்தைத் தாண்டி நாடு முழுவதும் திருக்குறளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
வள்ளுவத்தையும், திருக்குறளையும் பரப்புவதற்கான தனி அமைப்பை (எஸ்.ஒய்.டி.) நடத்தி வரும் தருண் விஜய், ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை வியாழக்கிழமை சந்தித்தார். அவருடன் எஸ்.ஒய்.டி. அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராம் சுப்ரமணியனும் சென்றார். ஒன்றாம் வகுப்பில் இருந்து 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் திருக்குறளை தனி நீதிநெறி பாடமாக வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்அதற்கான பாடப் புத்தகங்களை உலகத் தரத்தில் வடிவமைப்பது குறித்தும், திருக்குறளை சமகால தலைமுறையினரிடையே கொண்டு சேர்ப்பதன் அவசியம் குறித்தும் அவர்கள் அப்போது விவாதித்தனர். அதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அந்தச் சந்திப்பின்போது தருண் விஜய் தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலை தருண் விஜய் புதன்கிழமை சந்தித்தார். தேசிய அளவில் திருக்குறளை முன்னெடுத்து செல்வதற்கான கோரிக்கைகளையும், ஆலோசனைகளையும் அவர் அப்போது முன்வைத்தார். அவரது ஆலோசனைகள் தேசியக் கல்விக் கொள்கையில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக எஸ்.ஒய்.டி. அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தருண் விஜய், குமரி முதல் இமயம் வரை திருக்குறள் எதிரொலிக்க வேண்டும்; அதுதொடர்பாக அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மாநில, மத்திய அரசுகளுடன் பேசி வருகிறேன் என்றார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews