உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 01, 2019

உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் !

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய காவி அமைப்புகள் ஆயுத பயிற்சி அளிப்பதை வெளிப்படையாகவே செய்துவருகின்றன. அதுபோதாதென்று உத்திர பிரதேசத்தில் இராணுவ பயிற்சி பள்ளியை தொடங்க இருக்கிறது ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்பின் முன்னாள் சர்சங் சலக் ராஜேந்திர சிங் என்கிற ராஜூ பையா என்பவரின் பெயரில் அடுத்த ஆண்டு இராணுவ பள்ளி செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கல்வி பிரிவான வித்யா பாரதி, இந்தப் பள்ளியை நடத்தும் என்றும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை கற்பிக்கும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. வித்யா பாரதி, தற்போது நாடெங்கிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை நடத்துகிறது. இந்த இராணுவ பள்ளிக்கு முன்னாள் இராணுவ வீரர் சவுதரி ராஜ்பால் சிங் என்பவர் அளித்த 8 ஏக்கர் நிலத்தில் ஆண்களுக்கான உறைவிடப்பள்ளி கட்டுமானப்பணி நடந்துவருகிறது. இந்தப் பள்ளிக்கும் பாஜகவின் பிராந்திய தலைவர் டிகே. சர்மா தலைமையில் பள்ளி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ பயிற்சியோடு, பண்புநலன்களை வளர்ப்பது குறித்தும் சொல்லித்தரப்படும் எனவும் தெரிய வந்துள்ளது. மத்திய அரசே இராணுவ பள்ளிகளை நடத்திக்கொண்டிருக்கும்போது, வலதுசாரி சிந்தனையுள்ள, வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய ஒரு அமைப்பு இராணுவ பள்ளிகளை நடத்துவதன் தேவை என்ன என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், அரசியல் ஆதாயங்களுக்காக ஆர்.எஸ்.எஸ். இதைச் செய்வதாகவும் இவர்களின் இராணுவ பள்ளியில் மாணவர்களுக்கு கும்பல் வன்முறைகள் குறித்தும் சமூக சமத்துவத்தை எப்படி குலைப்பது என்பதையும்தான் கற்றுத்தருவார்கள் என்கிறார். முன்னாள் இராணுவ அதிகாரி அசோக் கே மேத்தா, “மதச்சார்பற்ற, அரசியலற்ற, தொழில் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட நமது ஆயுதப்படையின் இயல்பை சீர்குலைக்கும் வகையில் ஆர்.எஸ். எஸ். செயல்பாடு உள்ளது” என்கிறார். மேலும் அவர், “சித்தாந்த அடிப்படையில் ஒற்றை மதத்தைக் கொண்ட அந்த அமைப்பு, மற்ற மதங்களுக்கு எதிரான, தலித்துகள், பெண்களுக்கு எதிரான கண்ணோட்டம் உடையது. இராணுவத்தின் கண்ணோட்டத்துக்கும் இது எதிரானது. இராணுவம் அரசியலற்றது, குறிப்பாக, மதச்சார்பற்றது. எனவே, ஒற்றை மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல், மதவாத போதனைகளுக்கு அங்கே இடமில்லை” எனவும் விமர்சித்துள்ளார். ஆர்எஸ்எஸ் ராணுவப் பள்ளி நடத்துவதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தங்களுக்குக் கிடைத்திருக்கும் ஆட்சி வாய்ப்பைப் பயன்படுத்தி, உடனடியாக இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்றி, இந்துத்துவாவை எங்கெங்கிலும் பரவிடச் செய்து நிலைநாட்ட வேண்டும் என்பதைத் திட்டவட்டமாக்கிக் கொண்டு வெளிப்படையாகவே ஆர்எஸ்எஸ் சிறிதும் தயக்கமுமின்றி பகிரங்கமாகவே இறங்கிவிட்டது. புதிய தேசியக் கல்விக் கொள்கை என்ற ஆயுதம்மூலம் கல்வித் துறையை காவிமயமாக்கிட, சமஸ்கிருதமயமாக்கிட, இந்துத்துவமயமாக்கிட தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராணுவப் பள்ளியை ஆர்எஸ்எஸ் நடத்துவதா? ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்விப் பிரிவின் சார்பாக ராணுவப் பள்ளி உத்தரப்பிரதேசத்தில் 40 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படுகிறது. அதில் மாணவர்களைச் சேர்த்துப் பயிற்சி கொடுத்து, அவர்களை ராணுவ அதிகாரிகளாக அக்கல்லூரி உருவாக்கித் தரும். அந்தப் பள்ளிக்கு ராஜூ பையா என்று பெயர் சூட்டப்பட உள்ளது. ராஜூ பையா என்பவர் ஆர்எஸ்எஸ் இன் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது). இதற்குரிய இடம் தந்தவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அலேகோயல் என்பவர். இப்பள்ளியில் ஆண்டுக்கு 1,120 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதில் முன்னாள் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் பிள்ளைகளுக்கு 56 இடங்கள் ஒதுக்கப்படும்.
இத்துடன் ஆர்எஸ்எஸ் வித்தியா பாரதி அமைப்பினால் தங்கிப் படிக்கும் ஏழாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஒரு ஆர்எஸ்எஸ் பள்ளி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் தொடங்கி நடத்தப்படும். அதிலிருந்து இந்த ராணுவப் பள்ளிக்கு மாணவர்களைச் சேர்க்க அது ஒரு வாய்க்காலாக வழிவகுக்கவே இப்பள்ளி. இந்துத்துவா கொள்கையின் செயல் வடிவத்திற்கு முதல் படி ஆர்எஸ்எஸ் இன் ராணுவப் பள்ளி ஏற்பாடு. தனியார் கல்வி அமைப்புகள் நடத்தலாம் என்று விளம்பரம் செய்து, நாட்டின் எல்லா திசைகளிலும் பரவலாக 10 சைனிக் பள்ளிகளை ஏற்படுத்தலாமே! ஏன் அதனை உத்தரப்பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு மட்டும் தர வேண்டும்? எதிர்க்கட்சிகளும், நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் இவைகளில் அக்கறையும், கவலையும் உள்ளவர்களும் ராணுவம் உள்பட சர்வமும் காவிமயமாக்கப்படுகிறது என்பதை மக்களிடம் விளக்கி, புரிய வைக்க வேண்டும்", என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews