தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு: ஜிப்மர் மருத்துவர்கள், மாணவர்கள் போராட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 01, 2019

தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு: ஜிப்மர் மருத்துவர்கள், மாணவர்கள் போராட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து ஜிப்மரில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் வகுப்பினை புறக்கணித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ துறையில் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வரும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதாவின்படி இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்பட்டது. இதை கண்டித்தும், தேசிய மருத்துவ ஆணையத்தின் சில ஷரத்துக்களில் மாற்றங்கள் கொண்டு வரக்கோரியும் நாடு தழுவிய அளவில் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் நேற்று 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று புதுச்சேரியில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடாததால், இன்று (வியாழக்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் வகுப்பினை புறக்கணித்து ஜிப்மர் வளாகம் முழுவதும் பேரணியாக சென்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவர்களின் போராட்டம் நோயாளிகளை பாதிக்கப்படாத வகையில் அனைத்து பிரிவிலும் குறிப்பிட்ட மருத்துவர்கள் பணியாற்றி விட்டு போராட்டத்தில் பங்கேற்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews