Breaking

Friday, August 30, 2019

சட்ட கல்லூரியில் 'ஜீன்ஸ், லெக்கின்ஸ் உடைகள் அணிய தடை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சென்னையில், அரசு சட்ட கல்லுாரியில் படிக்கும், மாணவ - மாணவியர், 'ஜீன்ஸ், லெக்கின்ஸ்' மற்றும் சுடிதார் உடைகள் அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது.அம்பேத்கர் சட்ட பல்கலையின் வளாகத்தில், சீர்மிகு சட்ட பள்ளி என்ற பெயரில், கல்லுாரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ - மாணவியருக்கு, உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, மாணவர்கள்,கறுப்பு நிற, 'பேன்ட், பெல்ட், ஷூ' மற்றும் வெள்ளை முழுக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும்.மாணவியர், கறுப்பு நிற சல்வார், கால் மூட்டு வரை நீளம் உள்ள வெள்ளை குர்தா, கறுப்பு நிற மேல் அங்கி ஆகியவற்றை மட்டுமே அணிய வேண்டும். மேலும், அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என,கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.அதேபோல், மாணவர்கள், 'ஜீன்ஸ் பேன்ட், டீ ஷர்ட், டிசைன் ஷூ' மற்றும் அரைக்கை சட்டை அணியக் கூடாது. மாணவியர், 'ஜீன்ஸ், லெக்கின்ஸ், குட்டை மேல் சட்டை, சுடிதார்' ஆகியவற்றை அணிந்து, கல்லுாரிக்கு வரக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த உடை விதிகளை பின்பற்றியே, சீர்மிகு சட்ட கல்லுாரியிலும், பல்கலை வளாகத்திலும் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என, பல்கலை நிர்வாகம் கூறியுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog