👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கொல்கத்தா, மேற்கு வங்கம்: இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கியிடம், ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்களுக்கும் வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டு வரப் போகிறதாம்.
மத்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் வட்டி விகித அடிப்படையில் ஏற்கனவே எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க ஆலோசித்துக் கொண்டிருக்கிறதாம்.
இந்த நடவடிக்கையால் வங்கியில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை, 2019- 20 நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டிலாவது அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்களாம்.
வட்டி குறைப்பு
குறைப்பு
கடந்த ஜூலை 2019-ல் தான் இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ மத்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தின் அடிப்படையில் வீட்டுக் கடன்களைக் கொடுக்கத் தொடங்கியது. ஆக புதிதாக ஜூலை 2019-க்குப் பிறகு வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே ஆர்பிஐயின் ரெப்போ ரேட் அடிப்படையிலான வட்டி விகிதத்தில் கடன்கள் கிடைத்தன. ஜூலை 2019-க்கு முன் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு ஆர்பிஐயின் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் கடன்கள் கிடைக்கவில்லை.
யோசனை
ஆலோசனை
தற்போது ஜூலை 2019-க்கு முன் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி இருந்தவர்களுக்கும், ஆர்பிஐ ரெப்போ ரேட் வட்டி விகிதத்தின் அடிப்படையில் வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைக்க ஆலோசித்து வருவதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜ்னேஷ் குமார் சொல்லி இருக்கிறார். இப்படி ஜூலை 2019-க்கு முன்பே கடன் வாங்கியவர்களுக்கு ஆர்பிஐ ரெப்போ ரேட் வட்டி விகிதப் படி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் கணக்கிட்டால் சுமார் 0.30% முதல் 0.70% வரை வட்டி குறையுமாம்.
எப்படி
கணக்கு
தற்போது ஆர்பிஐ ரெப்போ ரேட் வட்டி விகிதம் 5.40 சதவிகிதமாக இருக்கிறது. அதோடு 2.25 சதவிகிதம் கூடுதல் வட்டி கணக்கிட்டால் 7.65 சதவிகிதம். இது தான் ரெப்போ வட்டி விகித அடிப்படையில் வரும் வட்டி. இதன் மீது 0.40% முதல் 0.55 சதவிகிதம் வரை கூடுதல் வட்டியை வைத்துக் கணக்கிட்டால் 8.05 முதல் 8.20 சதவிகிதம் வரை வட்டி வருகிறது. எஸ்பிஐ வங்கி, ரெப்போ ரேட் அடிப்படையிலான வட்டி விகிதத்தை அனைத்து வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கும் அமல்படுத்தினால் சுமாராக 8.05% முதல் 8.20%-க்குள் வீட்டுக் கடன் வாங்கலாம்.
இப்போது எப்படி
தற்போதைய நிலை
ஜூலை 2019-க்கு முன், 75 லட்சம் ரூபாய்க்குள் வாங்கிய வீட்டுக் கடன்களுக்கு, எஸ்பிஐ வங்கி, தன் வாடிக்கையாளர்களுக்கு 8.35 சதவிகிதம் முதல் 8.90 சதவிகிதம் வரை வீட்டுக் கடனுக்கு வட்டி வசூலித்து வருகிறார்கள். இது முந்தைய மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் பேஸ்ட் லெண்டிங் ரேட் (MCLR - Marginal Cost of Funds Based Lending Rate) அடிப்படையில் கணக்கிடப்பட்டவை. கடந்த பிப்ரவரி 2019-ல் இந்த எம் சி எல் ஆர் வட்டி விகிதமும் 0.30 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U