👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நம்மில் பலருக்கு மொபைல் போனில் நெட்டை பயன்படுத்தாமலேயே மொபைல் டேட்டா காலியாகிறதா? என்ன காரணம்? சரி செய்வது எப்படி? இது குறித்த ஒரு சின்ன யோசனை.
2ஜிபி, 5ஜிபி என்று ரீசார்ஜ் செய்தால் மட்டும் போதாது! அதை சரியாக பயன்படுத்த தெரிய வேண்டும்!
பயன்படுத்தாமலேயே மொபைல் டேட்டா காலியாகிறதா? என்ன காரணம்?சரி செய்வது எப்படி?
100எம்பி அளவிலான டேட்டாவை ஒரு மாதம் முழுக்க 'பொத்திப்பொத்தி' பாதுகாத்த காலமெல்லாம் மலையேறி விட்டது.
இப்போதெல்லாம் மதிய உணவு இடைவேளை வருவதற்கு முன்னரே, ஜியோவிடம் இருந்து 'உங்கள் ஜியோ எண்ணிற்குரிய தினசரி அதிவேக டேட்டா அளவில் 90% டேட்டாவை உபயோகித்து விட்டீர்கள்' என்கிற மெசேஜ் வந்து நம்மை பதற வைத்து விடுகிறது.
'அட, ஆமப்பா! 2ஜிபி பத்தவே மாட்டேங்குது. யூஸ் பன்னுறதே இல்ல மச்சி! இருந்தாலும் டேட்டா காலி ஆகிடுது, என்ன பண்ணுறதுனே தெரியலப்பா?!' என்று புலம்பும் லட்சக்கணக்கான இணையதள வாசிகளில் நீங்களும் ஒருவர் என்றால், இனி நீங்கள் கவலைப்பட தேவையில்லை…!
நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.
ஏனெனில், உங்களின் டேட்டாவை 'தின்னு தீர்ப்பது' எது? தேவையில்லாமல் Mobile Data வீணாவதை தடுப்பது எப்படி? போன்ற கேள்விகளுக்கான பதில்களையும் தந்திரங்களையும் உள்ளடக்கியதே இந்த பயனுள்ள தொகுப்பு!
உங்களின் டேட்டாவை 'தின்னு தீர்ப்பது' எது?
வேறு என்னவாக இருக்க முடியும்? நிச்சயமாக பேஸ்புக் தான். பொழுது போகாமல் உள்ளே நுழைவீர்கள், திரும்பி வெளியே வரும் போது 1ஜிபி காணாமல் போய் இருக்கும்,அதிலும் பேஸ்புக்கில் வீடியோ பார்க்க ஆரம்பித்தால், சொல்லவே வேண்டாம்! இந்த மாய வலையில் இருந்து தப்பிக்க இரண்டு வழிகள் உள்ளன.
ஒன்று இமேஜ் மற்றும் வீடியோ தரத்தை கட்டுப்படுத்துவது,
இரண்டாவது - டேட்டா சேவரை எனேபிள் செய்வது.
01. இமேஜ் மற்றும் வீடியோ தரத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
- ஸ்மார்ட்போனில் இருக்கும் பேஸ்புக் ஆப்பை திறக்கவும்.
- இப்போது வலதுபக்கத்தில் மேல் மூலையில் உள்ள Hamburger icon-ஐ கிளிக் செய்யவும், ஐபோன் பயனராக இருந்தால் இடது பக்கத்தில் இருக்கும்.
- இப்போது Settings விருப்பத்தின் கீழ் Settings and Privacy விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- இப்போது ஸ்க்ரோல் டவுன் செய்து Media and Contacts விருப்பத்திற்கும் நுழையவும்.
இப்போது நீங்கள் பலவகையான Videos and Photos-களுக்காக விருப்பங்களை காண்பீர்கள். அதாவது Videos in News Feed start with Sound, வீடியோ செட்டிங்ஸ்-ன் கீழ் Upload HD button மற்றும் போட்டோ செட்டிங்ஸ்-ன் கீழ் Upload HD photo போன்ற பல விருப்பங்களை காண்பீர்கள். இப்போது உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எனேபிள் மற்றும் டிஸேபிள்களை நிகழ்த்தவும். இது நிச்சயமாக உங்களின் டேட்டாவை சேமிக்க உதவும்.
02. டேட்டா சேவர் விருப்பத்தை எனேபிள் செய்வது எப்படி?
பேஸ்புக் தனது பயனர்களுக்கு, டேட்டா சேவர் என்கிற ஒரு விருப்பத்தை வழங்குகிறது.
இது Image size-ஐ குறைத்தல் மற்றும் ஆட்டோ-பிளே வீடியோவை முடக்குதல் போன்றவைகளை நிகழ்த்தி, உங்களின் டேட்டாவை சேமிக்க உதவும். இதை எனேபிள் செய்ய:பேஸ்புக்கில் உள்ள Hamburger icon-ஐ கிளிக் செய்யவும்.
- இப்போது Settings and Privacy என்பதை கிளிக் செய்யவும்.
- இப்போது Data Saver விருப்பத்தை கிளிக் செய்து, உள்நுழைந்து அதை எனேபிள் செய்யவும்.
மேற்கூறப்பட்ட இரண்டு பேஸ்புக் தந்திரங்களை நிகழ்த்த, 'ஆட்டோமேட்டிக்காக' உங்களின் டேட்டா சேமிக்கப்படும், அதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U