அந்த நாள் ஞாபகம்... வந்ததே நண்பனே! 50 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்களுடன் சந்திப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 19, 2019

அந்த நாள் ஞாபகம்... வந்ததே நண்பனே! 50 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்களுடன் சந்திப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'ஐயா, நான்தாங்க 'புட்பால் பிளேயர்' கோவிந்தராஜ்... நியாபகம் இருக்குங்களா...?'91 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் சின்னக்குட்டி, மேலும் கீழும் பார்க்கிறார். பிறகு, அடையாளம் கண்டு கொண்டு, 'டேய்... நீயா' என்ற கணீர் குரல் வருகிறது அவரிடமிருந்து.
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியில், 50 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள், நேற்று இப்படி ஆளாளுக்கு தங்கள் ஆசிரியர்களை சந்தித்து, ஆசி பெற்ற நிகழ்வு நடந்தது.நகராட்சி ஆண்கள் உயர்நிலை பள்ளியாக இருந்தபோது, 1969ம் ஆண்டு படிப்பை முடித்த, 80 பேரும், பல்வேறு உயர் பதவிகள் வகித்து, இப்போது ஓய்வு பெறும் வயதை நெருங்கி விட்டனர். நேற்று குடும்பத்துடன் சந்தித்து, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியின் துவக்கத்தில் பேசிய, மறுஇணைவு குழு (ரீயூனியன் கமிட்டி) செயலாளர் பாலகிருஷ்ணன், ''இந்த உலகில் எந்தவொரு மாற்றத்தையும் உருவாக்குவது ஆசிரியர்கள்தான். அந்த மாற்றம் நிகழும் இடம் வகுப்பறை. எங்களுக்கு நற்போதனைகள் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள், இல்லையேல் நாங்கள் இல்லை,'' என்றார். ஓய்வு பெற்ற ஆசிரியர் ரத்தினசபாபதி பேசுகையில், ''படிப்பு மட்டுமின்றி நல்ல குணம், ஒழுக்கம் உள்ளிட்ட நற்பண்புகளை கொண்டவனே நல்ல மாணவன். ஒரு தலைமுறை தாண்டிய நிலையில், ஆசிரியர்களை மறக்காமல், சந்திப்புக்கு அழைத்தது பாராட்டுக்குரியது. இப்படிப்பட்ட மாணவர்களை பெற, நாங்கள் தவம் செய்துள்ளோம்,'' என்றார். முன்னதாக, மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு, வகுப்பறைகளை பார்வையிட்டனர். போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். தற்போதைய தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ரங்கசாமி, லெனின் ரங்கராஜ், அப்துல் அஜீஷ், சின்னக்குட்டி, கண்ணன், முன்னாள் மாணவர் ராம்ஜி, மறு இணைவுக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews