தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்! : அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அமலுக்கு வருகிறது நெக்ஸ்ட் தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 09, 2019

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்! : அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அமலுக்கு வருகிறது நெக்ஸ்ட் தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார் . தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதுதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் இந்திய மருத்துவ கவுன்சில்தான் தற்போது மருத்துவ துறையை நிர்வகித்து வருகிறது.
இதில் பல்வேறு ஊழல்கள் நடப்பதாக குற்றம்சாட்டிய மத்திய அரசு, மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு, பல்வேறு அதிரடி மாற்றங்களுடன் தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டு வர முடிவு செய்தது. இதற்காக, 1956ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்திற்கு பதிலாக, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தேசிய மருத்துவ ஆணைய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. `தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019’ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஜனாதிபதி ராம்நாத் கையெழுத்திட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றும், விதிமுறைகள் வகுக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘‘இந்த சட்டம் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு மைல்கல் எனலாம். இதன் மூலம் மருத்துவ கல்விக் கட்டணம் குறையும், தரமான மருத்துவ கல்வி கிடைக்கும். இந்த மசோதாவை எதிர்த்து போராடிய மருத்துவ மாணவர்கள் மற்றும் டாக்டர்களின் சந்தேகங்களை போக்கியுள்ளேன்’’ என்றார்தேசிய மருத்துவ ஆணைய மசோதாவின் சிறப்பு அம்சங்கள் * இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், கடந்த 1956ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. * 63 ஆண்டுகள் பழமையான இந்த சட்டத்தின் மூலம் ஊழல்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
* ‘நெக்ஸ்ட்’ தேர்வானது முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வாகவும், வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகளை முடித்து வரும் டாக்டர்களுக்கு தகுதி தேர்வாகவும் இருக்கும். * புதிதாக அமைக்கப்படும் மருத்துவ ஆணையத்தின் 26 உறுப்பினர்களில் 21 பேர் டாக்டர்களாக இருப்பார்கள். * மருத்துவ ஆணையம் மூலம் மருத்துவ கல்லூரிகளின் 75 சதவீத இடங்கள் ஒழுங்கு முறைப்படுத்தப்படும். கட்டணமும் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும். * ‘நெக்ஸ்ட்’ தேர்வு அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அமல்படுத்தப்படும். *இந்த நெக்ஸ்ட் தேர்வு எழுதிய பின் 3 வருடம் கிராமம் அல்லது பழங்குடி மருத்துவமனையில் கண்டிப்பாக மாணவர்கள் பணியாற்ற வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews